தமிழ்நாடு

காட்பாடியில் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசிய இருவர் கைது...வெளியான அதிர்ச்சி பின்னணி

புகார் அளித்த 24 மணி நேரத்துக்குள் அதிரடி காட்டிய பிரம்மபுரம் போலீசார்

 காட்பாடியில் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசிய இருவர் கைது...வெளியான அதிர்ச்சி பின்னணி
பெட்ரோல் குண்டு வீசிய இருவர் கைது
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த தாங்கள் கிராமத்தை சேர்ந்தவர்கள் சகோதரர்களான முடி திருத்தும் தொழில் செய்யும் சிவக்குமார் (53) மற்றும் லாரி ஓட்டுநரான சுதாகர் (45). இருவரும் அருகருகே வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

பெட்ரோல் குண்டுவீச்சு

இந்நிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு திடீரென இருவரின் வீட்டின் வெளியே வெடிச்சத்தம் கேட்டுள்ளது. வெளியே சென்று பார்த்த போது அடையாளம் தெரியாத நபர்கள் இரண்டு வீட்டின் மீது இரண்டு பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பி ஓடி உள்ளனர்.

உடனடியாக அருகில் இருந்த தண்ணீரை ஊற்றி எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்துள்ளனர். இதுகுறித்து பிரம்மபுரம் காவல் நிலையத்தில் சிவக்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் காட்பாடி டிஎஸ்பி பழனி உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் ஏழுமலை வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் சேர்க்காடு பகுதியை சேர்ந்த புருஷோத்தமன் மற்றும் கொல்லைமேடு பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் என்பது தெரியவந்தது.

2 பேர் கைது

காதல் விவகாரத்தில் நள்ளிரவில் மாருதி எர்டிகா காரில் வந்து பெட்ரோல் குண்டு வீசியதாகவும் விசாரணையில் தெரியவந்தது.இதன் அடிப்படையில் பிரம்மபுரம் போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். காதல் விவகாரத்தில் வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.