தென்மேற்கு வங்கக் கடலில் உருவான 'டிட்வா' புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகச் சென்னை கடற்கரை அருகே மையம் கொண்டுள்ள நிலையில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று (டிசம்பர் 2) மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தாழ்வு மண்டலத்தின் நிலையும் இன்றைய எச்சரிக்கையும்
'டிட்வா' புயல் தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னை கடற்கரை அருகே மையம் கொண்டுள்ளது. இதனால் கடந்த 24 மணிநேரத்துக்கு மேலாக சென்னை, திருவள்ளூர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த புயல் சின்னமானது அடுத்த சில மணிநேரங்கள் சென்னை கடற்கரை அருகே நிலை கொண்டு, பின்னர் இன்றிரவு மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 5 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் புதுச்சேரிக்கு இன்று கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
நாளைக்கான மழை எச்சரிக்கை
நாளை (டிசம்பர் 3) மேற்கு மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், சேலம், நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதன் பிறகு, காற்றின் வேகம் படிப்படியாக குறைந்து நாளை காலை முதல் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே, அப்பகுதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LIVE 24 X 7