கோயம்புத்தூரில் உள்ள பெரியகடை வீதி காவல் நிலையத்திற்குள் கட்டிடத் தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், பொதுமக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கை விசாரித்துவரும் ஐந்தாவது ஜூடிசியல் நீதிமன்ற நீதிபதி வெர்ஜினி வெஸ்டா, இரண்டாவது நாளாகக் கள ஆய்வு மற்றும் விசாரணை நடத்தினார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி இரவு, ராமசெட்டிபாளையம் காமராஜ் நகரைச் சேர்ந்த ராஜன் என்கிற அறிவொளி ராஜன், காவல் நிலையத்திற்குச் சென்று தன்னை 25-க்கும் மேற்பட்டோர் துரத்தி வருவதாகவும், அவர்கள் தன்னைக் கொலை செய்ய வாய்ப்புள்ளதாகவும் காவலர்களிடம் தெரிவித்துள்ளார். அப்போது அங்கிருந்த காவலர்கள் அவரைச் சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், சிறிது நேரத்திலேயே, யாருக்கும் தெரியாமல் மீண்டும் காவல் நிலையத்திற்குள் நுழைந்த ராஜன், முதல் தளத்தில் உள்ள குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
முதற்கட்ட விசாரணையில், ராஜன் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்ததும், அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு கோயம்புத்தூர் நீதிமன்ற வளாகத்திலும் தன்னை சிலர் கொலை செய்ய வருவதாகக் கூறி தகராறு செய்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு, ராஜனின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ராஜனின் உடலில் எந்தவித சந்தேகமான காயங்களும் இல்லையென அவர்களும் உறுதி செய்தனர். மேலும், தன்னை யாரோ கொலை செய்ய வருவதாக அடிக்கடி ராஜன் அச்சத்தில் இருந்ததாகவும், அந்தப் பயத்தினால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் கோவை ஐந்தாவது ஜூடிசியல் நீதிமன்ற நீதிபதி வெர்ஜினி வெஸ்டா சம்பந்தப்பட்ட காவல்நிலையத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். சம்பவம் நடந்தபோது பணியில் இருந்த காவல் துறையினரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து அவர் நேற்று இரண்டாவது நாளாகப் பெரிய கடை வீதி காவல் நிலையத்திற்கு சென்றார்.
அந்தக் காவல் நிலையத்தில் சட்டம் - ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு பணியாற்றி வரும் காவல் துறையினரிடம் தீவிர விசாரணை நடத்தினார். காவல் துறையினர் தனித் தனியாகச் சந்தித்து யாருக்குமே தெரியாமல் அவர் காவல் நிலையத்திற்குள் புகுந்தது எப்படி ? என்பது உள்பட பல்வேறு கேள்விகள் கேட்டு விசாரணை நடத்தினார்.