நீட் தேர்வு மையங்கள்
மதுரையில் மத்திய அரசின் சார்பில் இயக்கும் 2 KV (கேந்தரிய வித்யாலயா) பள்ளிகள் உள்ளது. அந்த இரண்டு பள்ளியிலும் இன்று நடைபெறும் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
முதலாவது மையமாக மதுரை நரிமேடு KV பள்ளியும், 2-வது மையமாக திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள KV பள்ளி என அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்., தேர்வு நுழைவு சீட்டை சரியாக படிக்காமல் தேர்வு எழுத வந்த மாணவி ஒருவர், முதலாவது நரிமேடு KV பள்ளி வளாகத்திற்கு தேர்வு மையத்திற்கு உள்ளே சென்றுள்ளார்.
வெளியே சென்ற மாணவி
ஆனால், தேர்வு மையத்திற்கு நண்பகல் 1:25 மணி அளவில் நடைபெற்ற ஆதார் சோதனையின் போது மாணவியின் தேர்வு மையம் திருப்பரங்குன்றம் KV பள்ளி என அறிந்தவுடன், அவர் வெளியே அனுப்பப்பட்டார். அப்போது நேரம் நண்பகல் 1:30 மணி. இதனால், நீட் தேர்வு எழுத வாய்ப்பு கிடைத்தும் மாணவியால் தேர்வு எழுத இயலவில்லை.இதனால் மிகுந்த மன வருத்ததுடன் வெளியே சென்றார். மாணவி தேர்வு எழுத முடியாமல் சென்றது அப்பகுதியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.