என்னதான் விலங்கு நல ஆர்வலர்கள் தெருநாய்களை விட்டுக் கொடுக்காமல் கரிசனம் காட்டினாலும், தெருநாய்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் தொடர் பாதிப்புகள் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் அவர்களிடம் தகுந்த பதில்கள் இல்லை. தெருநாய்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமா, வேண்டாமா என நாளுக்கு நாள் விவாதங்கள் நடந்துகொண்டிருக்கும் இதே காலகட்டத்திலேயே, தெருநாய்களால் தமிழகத்தில் அடுத்தடுத்து அரங்கேறிய சில பகீர் சம்பவங்கள் உங்கள் பார்வைக்கு…
தொட்டிலில் தூங்கிய குழந்தையை குதறிய தெருநாய்!
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் அருகேயுள்ள மேல்கொண்டாளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அபுதாஹிர் - சுல்தான் பீவி தம்பதி. இவர்களின் ஒன்றரை வயது குழந்தை அஜ்மல் பாட்ஷா, கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி காலை 7 மணியளவில் தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்திருக்கிறது. அப்போது, திடீரென குழந்தை வீலென அலறும் சத்தம் கேட்டு வீட்டிலிருந்தவர்கள் ஓடிவந்து பார்க்க, தெருநாய் ஒன்று தொட்டிலில் படுத்திருந்த குழந்தையின் தலையைக் கவ்வி முகம், உடல், கை, கால் என அனைத்துப் பகுதிகளிலும் கடித்துக் குதறிக்கொண்டிருந்திருக்கிறது. படிக்கும்போதே பதறவைக்கும் இப்படி ஒரு காட்சியை கற்பனை செய்யவோ, திரைப்படத்தில் ஒரு காட்சியாகக் காட்டினால் கண்கொண்டு பார்க்கவோகூட நம்மால் முடியாது. ஆனால், இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அந்த குழந்தையின் தாய் மனம் என்ன பாடுபட்டிருக்கும்?
அந்த குழந்தையின் தாய் சுல்தான் பீவியிடம் நாம் கேட்டதுதான் தாமதம். வெடித்து அழ ஆரம்பித்துவிட்டார். மெதுவாக தன்னைத் தேற்றிக்கொண்டு பேசியவர், "தூங்கிக்கிட்டிருந்த குழந்தை திடீர்னு அலற ஆரம்பிச்சதும் பீட்டுக்குள்ள வேலை பார்த்துக்கிட்டிருந்த நாங்க ஓடி வந்து பார்த்தோம். ஒரு வெறிநாய் குழந்தையை கண்டமேனிக்கு கடிச்சுக்கிட்டிருந்துச்சு. இதைப் பார்த்த எங்களுக்கு ஈரக்குலையே நடுங்கிடுச்சு. நாயை விரட்டினாலும் அது போகாம எங்களை கடிக்க வந்துச்சு. ஒருகட்டத்துல குழந்தையோட தலையைக் கவ்வி வெளியே இழுத்துட்டு ஓடப் பார்த்துச்சு. உடனே எங்கா அம்மா துணிஞ்சு நாயை விரட்ட கிட்ட போனப்போ அது அவங்களையும் கடிச்சுது. எவ்வளவோ போராடிதான் குழந்தையை நாய்க்கிட்டேயிருந்து மீட்டோம்.
குழந்தையோட உடம்பு முழுக்க அந்த நாய் கடிச்சதுல ஒரே ரத்தம். வலி தாங்க முடியாம எங்க பிஞ்சு புள்ள அவ்வளவு அழுதான்.
உடனே குழந்தையை தூக்கிக்கிட்டு ஜி.ஹெச்சுக்கு ஓடுனோம். அங்க, 'நாய் கடிச்ச குழந்தைக்கு ட்ரீட்மென்ட் பண்ண முடியாது'னு சொல்லிட்டாங்க. உடனே, 108 ஆம்புலன்ஸ்ல திருவாரூர் மெடிக்கல் காலேஜூக்குக் கொண்டு போனோம். அங்கதான் 10 நாள் வெச்சிருந்து ட்ரீட்மென்ட் கொடுத்தாங்க. இப்பதான் வீட்டுக்கு வந்துருக்கோம். இன்னும் எங்க குழந்தை அந்த அதிர்ச்சியிலேர்ந்து மீளலை தெருவுல நாய் குரைக்குற சத்தம் கேட்டாலே பயந்து அலறுறான். என் கணவர் வேற வெளிநாட்டுல வேலை இல்லாம இருக்கார். அன்றாட செலவுக்குக்கூட பணமில்லாமல் தவிச்சுக்கிட்டிருக்கோம்" என்றார் சோகத்துடன்.
இதுபற்றி எஸ்.டி.பி.ஐ கட்சியின் கூத்தாநல்லூர் நகரத் தலைவர் ஜாஹிர் ஹசைன், “அந்த குழந்தையின் தலையில் மட்டும் அந்த வெறிநாய் நான்கைந்து இடங்களில் கடிச்சு குதறியிருக்கு. அன்றைய தினமே ஊரில் சிறுவர்கள் உள்பட 7 பேரை அந்த வெறி நாய் கடிச்சிருக்குது. கூத்தாநல்லூர் நகராட்சி ஆணையர் கிருத்திகா ஜோதியை சந்தித்து முறையிட்டபோது, 'நீங்க நாயைப் பிடிக்கச் சொல்றீங்க. ஆனா, டெல்லியிலிருந்து மேனகா காந்தியே என்கிட்ட பேசுறாங்க, 'நீங்க நாயை பிடிச்சீங்கன்னா நாங்க டெல்லியில போராட்டம் பண்ணுவோம்'னு சொல்றாங்க' என்றார். அதன்பிறகுதான் அவரது பெயரையே பேனரில் போட்டு சாலை மறியல் போராட்டம் நடத்தினோம்" என்றார் ஆதங்கத்துடன்.
கன்னத்தில் குதறிய வெறிநாய்...தீவிர சிகிச்சையில் குழந்தை!
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ரேகா-நந்தலால் தம்பதியரின் மூன்றரை வயது சிறுவன் சத்யா. இவர்கள் குடும்பத்துடன் ஓசூர் அருகே உள்ள மாசிநாயக்கனப்பள்ளி கிராமத்தில் தோட்டக்கூலி வேலை செய்துவருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி, சிறுவன் சத்யா தெருவில் விளையாடிக்கொண்டிருந்தபோது தெரு நாய் ஒன்று சிறுவனை முகம், கை உள்ளிட்ட பகுதிகளில் கடித்துக் குதறியுள்ளது. பலத்த காயமடைந்த சிறுவனை மீட்ட பெற்றோர், ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்திருக்கின்றனர். அங்கு சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இதுகுறித்து அந்த தோட்ட உரிமையாளர் ராமமூர்த்தியிடம் பேசினோம். "ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால், சத்யா உள்ளிட்ட 5 குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தார்கள். திடீரென, தெரு நாய் ஒன்று கேட்டின் உள்ளே நுழைந்து சிறுவர்களை துரத்த ஆரம்பித்தது. குழந்தைகள் சிதறி ஓடினார்கள். ஒருகட்டத்தில் அந்த வெறி பிடித்த நாய், குழந்தை சத்யாவை கன்னம் உள்ளிட்ட இரண்டு இடத்தில் கடித்துக் குதற ஆரம்பித்தது. உடனே, அந்த நாயை துரத்திவிட்டு குழந்தையை ஓசூர் அரசு மருத்துவமனைக்கு தூக்கிக்கொண்டு ஓடினோம். குழந்தை தற்போது தீவிர சிகிச்சை பெற்றுவருகிறான். மூன்று நாட்களுக்குப் பிறகு இப்போதுதான் லேசாக சாப்பிட ஆரம்பித்திருக்கிறான்" என்றார் வேதனையுடன்.
இதுகுறித்து ஓசூர் 41-வது வார்டு கவுன்சிலர் குபேரன் நம்மிடம், "ஓசூர் முழுக்க எங்கு பார்த்தாலும் தெருநாய்கள்தான். மாநகராட்சி சார்பில், நாய்களுக்கு என்று ஒரு மருத்துவமனை கட்டினார்கள். அதில், நாலு மாதத்திற்கு முன்பு நாய்களைப் பிடித்து அறுவை சிகிச்சை செய்தனர். பிறகு எதுவுமே கண்டுகொள்வதில்லை" என்றார் காட்டமாக.
ஓசூரைச் சேர்ந்த தன்னார்வலர் கண்மணி நம்மிடம், "ஓசூரில் தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை மூன்று மாதங்களில் மட்டும் ஓசூரில் தெருநாய்கள் கடித்து 446 பேர் பாதிக்கப்பட்டு ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர்" என்றார்.
ஓசூர் மாநகராட்சியின் பொது சுகாதார குழுத் தலைவர் என்.எஸ்.மாதேஸ்வரனோ, "நிர்வாகத்தின் சார்பாக, இரண்டு நாய் சிகிச்சை மையங்கள் இருக்கின்றன. பெண் நாய்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்வது சாதாரண விஷயம் இல்லை. அதில் பல்வேறு இடர்பாடுகள் உள்ளன. ஆண் நாய்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்வது ஈஸியாக இருக்கிறது. ஆனாலும் தொல்லை நீடிக்கிறது. சமீபத்தில் பட்டதாரி இளைஞர் ஒருவர் நாய் கடித்து, இறந்துவிட்டார். நாய்கள் மூலம் மக்களுக்கு ரேபிஸ் நோய் பரவாமல் தடுக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஓசூர் மாநகராட்சியில் 94899 09828 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் 04344 247666 என்ற தொலைபேசி எண் உள்ளது. இந்த எண்களில் நாய்க்கடி தொடர்பான புகார்களை ஓசூர் மக்கள் நேரடியாகத் தெரிவிக்கலாம்" என்றார்.
இனிமே அவன் குரலை எப்போ கேட்பேன்?
கடலூர் மாவட்டம், விருத்தாசலத்தை அடுத்த குப்பநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் முருகவேல் - ஐஸ்வர்யா தம்பதிக்கு முகித், ரோகித் என இரண்டு மகன்கள். அவர்களில் ஐந்தே வயதான இளைய மகன் ரோகித் தற்போது உயிருடன் இல்லை. காரணம் ஒரு நாய். புத்திரசோகத்திலிருந்து மீள முடியாமல் தவிக்கும் முருகவேலுவை சந்தித்தோம். ஆகஸ்ட் 6 ஆம் தேதி ரோஹித்தை ஸ்கூல்ல விடுறதுக்காக வீட்டுலேர்ந்து என்னோட ஆட்டோவுல அழைச்சுக்கிட்டுப் போனேன். விருத்தாசலம் பைபாஸ்கிட்ட ஆட்டோ வரும்போது திடீர்னு ஒரு தெருநாய் குறுக்கால வந்துடுச்சு. டக்கென நாய் குறுக்க வந்ததால சுதாரிக்க முடியாம, ஆட்டோவை திருப்பிட்டேன். ஆனா அந்த இடம் ஒரு பக்கம் மேடாவும் ஒரு பக்கம் பள்ளமாவும் இருந்ததால, ஆட்டோ டக்குன்னு கீழே சாய்ஞ்சுடுச்சு. இதுல ஆட்டோவோட பின்பக்கம் உட்கார்ந்திருந்த என் பையனும், நானும் கீழே விழுந்தோம். இதுல என் பையன் தலையில நல்ல அடி எனக்கு அந்த நேரத்துல என்ன பண்றதுன்னு எதுவும் புரியல. ரோட்ல போனவங்க பாத்து எங்க வீட்டுக்கு தகவல் சொல்லி அனுப்புனாங்க.
108 ஆம்புலன்ஸை வரவெச்சு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு எங்களை கொண்டுபோனாங்க அப்போலாம் எனக்கு அரை மயக்கம். அந்த மயக்கத்துலயும் என் பையனுக்கு எதுவும் ஆகிடக்கூடாதுன்னுதான் நினைச்சேன். ஆனா, ஆஸ்பத்திரிக்கு போனதும் என் பையன் இறந்துட்டான்னு சொல்லிட்டாங்க சார். அதைக்கேட்டு எனக்கு உலகமே இருண்டுடுச்சு. எந்த பாவமும் செய்யாத சின்ன குழந்தை சார், அவனுக்கா இந்த நிலைமை வரணும்.
அன்னைக்கு அந்த தெருநாய் வராம இருந்திருந்தா இன்னைக்கு என் பையன் உயிரோட இருந்திருப்பான். எல்லார்கிட்டயும் நல்லா பேசுவான். போன வருஷம் அவன் ஸ்கூல்ல பாட்டுப் பாடி முதல் பரிசு வாங்குனான். வீட்ல எப்போதும் பாடிக்கிட்டேதான் இருப்பான். இனிமே அவன் குரலை எப்போ கேட்பேன். என் மகன் இறந்த அன்னைக்கு நானும் இறந்திருக்கணும், என் மனைவியும் நடைப்பிணமாகிட்டா மூத்த பையன் முகித்துக்காக உயிரை கையில பிடிச்சுக்கிட்டிருக்கோம்" என்றவர் தாங்கமாட்டாமல், ஓவென்று அழ ஆரம்பித்தார்.
சிறுவன் ரோகித்தின் தாய் ஐஸ்வர்யா, "கொஞ்ச நாளைக்கு முன்னாடி, எங்க வீட்டுக்கு பக்கத்துல ஒரு குருவி ஒண்ணு செத்து கீழே கிடந்துச்சு. அதைப் பார்த்த ரோகித்துக்கு அது, செத்துக் கிடக்குன்னு முதல்ல புரியல. நான் எடுத்துச் சொல்லி அவனுக்குப் புரிஞ்சதும் அழ ஆரம்பிச்சுட்டான். ஒரு குருவி செத்ததுக்காக அழுத புள்ள, இன்னைக்கு உயிரோட இல்ல. அன்னைக்கு காலையில, 'அம்மா உடம்புக்கு சத்தா சாப்பிடனும்னு மிஸ் சொன்னாங்க. பீட்ரூட் ஜூஸ் கொடுங்கம்மா'னு சொல்லி ஜூஸ் போட்டுக் குடிச்சுட்டு ஸ்கூலுக்குப் போன புள்ள திரும்ப வரலையே என சொல்லி அழுதவரை நம்மால் தேற்ற முடியவில்லை.
வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருந்த ரோகித்தின் அண்ணனான எட்டு வயது முகித்திடம் பேச்சுக் கொடுத்தோம். "தம்பி பாட்டி வீட்டுக்குப் போயிருக்கான் வந்துடுவான். அவன் வந்ததும் சேர்ந்து விளையாடுவேன்" என்றான். அவன் திரும்பி வரவே போவதில்லை எனும் உண்மை ஒரு நாள் முகித்துக்குத் தெரிய வரும். அப்போதாவது நம் ஊரில் தெருநாய் தொல்லைகள் ஓய்ந்திருக்கட்டும்.
(கட்டுரை: - ஆர்.விவேக் ஆனந்தன், பி.கோவிந்தராஜூ, பொய்கை.கோ.கிருஷ்ணா / குமுதம் ரிப்போர்ட்டர் / 09.09.2025)