தமிழ்நாடு

பிரதமர் மோடி பார்வையிட உள்ள கண்காட்சி...அரியலூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

அரியலூர் - சைவ சித்தாந்தமும் சோழர் கோவில் கலைகளும் குறித்த கண்காட்சி பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி பார்வையிட உள்ள கண்காட்சி...அரியலூரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
அரியலூரில் சைவ சித்தாந்தமும் சோழர் கோவில் கலைகளும் குறித்த கண்காட்சி தொடங்கியது
அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் சோழ பேரரசின் மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த ஆடி திருவாதிரையான 23ஆம் தேதி முதல் ஐந்து நாள் விழாவாக இந்திய கலாச்சாரத்துறை மற்றும் இந்திய தொல்லியல் துறை சார்பில் இன்று தொடங்கியது.

கோவில் கலைகள் குறித்த கண்காட்சி

ஒவ்வொரு நாளும் பல்வேறு கிராமிய இசை நிகழ்ச்சிகள் சோழர்கள் குறித்த நாடகம் ஆகியவை நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக இந்திய தொல்லியல் துறை மற்றும் இந்திய கலாச்சாரத்துறை சார்பில் சைவ சித்தாந்தமும் சோழர் கோவில் கலைகளும் குறித்த கண்காட்சி அரங்கு இன்று பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது.

இந்த கண்காட்சி அரங்கில் சோழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்கள் அதன் சிறப்புகள் மற்றும் சோழர்களின் படையெடுப்புகள் அதில் பெற்ற வெற்றிகள் குறித்த தகவல்களும் இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு தெய்வங்களின் திருவுருவங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்து.

பிரதமர் மோடி பார்வையிடுகிறார்

இந்த கண்காட்சி அரங்கினை ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழாவின் கடைசி நாளான 27ஆம் தேதி கங்கைகொண்ட சோழபுரம் வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி கண்காட்சி அரங்கினை பார்வையிடுகிறார். இதனால் அரியலூரில் பாதுகாப்பு தொடர்பான பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. குறிப்பாக சாலை வசதிகள் உள்ளிட்டவை குறித்தும் பாதுகாப்பு ஏற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.