சென்னை கோட்டூர்புரம் கோட்டூர் கார்டன் இரண்டாவது பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஐஏஎஸ் அதிகாரி சந்தீப் நந்தூரி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் தற்போது தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகத்தில் (TIDCO) நிர்வாக இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.
இவரது வீட்டில் பாலன் என்ற சமையல்காரர் நான்கு ஆண்டுகளாகவும், தேவி, ராஜேஸ்வரி என இரு பெண்கள் ஓர் ஆண்டாக வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி ஐஏஎஸ் அதிகாரி சந்தீப் நந்தூரி தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றதால் லாக்கரில் 10 லட்ச ரூபாயை வைத்துப் பூட்டி சாவியை ஒரு பையில் போட்டு அந்தப் பையைப் பீரோவில் வைத்துப் பூட்டி விட்டுச் சென்றுள்ளார்.
பின்னர் 28 ஆம் தேதி வீடு திரும்பி அவர் நேற்று லாக்கரை திறந்து பார்த்தபோது அதில் வைத்திருந்த 10 லட்ச ரூபாயில் 4.50 லட்ச ரூபாய் மட்டும் திருடு போனது தெரியவந்தது. மேலும் பீரோவில் வைத்திருந்த நகைகள் அப்படியே இருந்த நிலையில் பணம் மட்டும் 4.50 லட்ச ரூபாய் திருடு போனதால் அதிர்ச்சி அடைந்து வீட்டில் வேலை பார்த்து வந்த ஊழியர்களிடம் விசாரித்ததாகத் தெரிகிறது. இருப்பினும் எந்தப் பயனும் ஏற்படவில்லை.
இதனால் ஐஏஎஸ் அதிகாரி சந்தீப் நந்தூரியின் மனைவி அத்யஷா பரிதா இது தொடர்பாகக் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வீட்டில் தங்கி வேலை பார்த்து வந்த சமையல்காரர் பாலன், பணிப்பெண் தேவி, ராஜேஸ்வரி ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.