தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, 8 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத் துறை முக்கியமான அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.
கனமழையால் ஏற்படக்கூடிய அவசரநிலைகளை சமாளிக்க முன் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு ஆட்சியர்களுக்கு கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கேரளா, கர்நாடகாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கேரள – தமிழக எல்லையோர மாவட்டங்கள், நீலகிரி, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை, அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்குக் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வரும்ஆகஸ்ட் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கன முதல் மிகக் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 3 ஆம் தேதி நெல்லை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி, ஈரோடு, தருமபுரி, சேலம், திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
ஆகஸ்ட் 4 அன்று தேனி, தென்காசி மாவட்டங்களில் கனமழையும், மறுநாள், ஆகஸ்ட் 5 ஆம் தேதி நீலகிரி, கோவை மாவட்டங்களில் அதி கனமழையும், தேனி, தென்சாசி மாவட்டங்களில் மிகக் கனமழையும், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 6 ஆம் தேதி நீலகிரி, தேனி, தென்காசி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆகஸ்ட் 7ஆம் தேதி கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை, இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அரசு நடவடிக்கை:
கனமழை மற்றும் வெள்ள அபாயமுள்ள பகுதிகளில் விரைவான மீட்பு மற்றும் பாதுகாப்பு பணிகளுக்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளக் கோவை, நீலகிரி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 8 மாவட்ட ஆட்சியர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு ஆலோசனை:
வெள்ளப்பாதிக்குள்ளாகக்கூடிய பகுதிகளில் தேவையில்லாத பயணங்களைத் தவிர்க்கவும், மின்சாரம் செல்லும் கம்பிகள் மற்றும் மரங்கள் அருகே செல்ல வேண்டாம்
அவசர தேவைகளுக்காக அருகில் உள்ள நிர்வாக அலுவலகங்களைத் தொடர்புகொள்ளவும்
அரசு உத்தரவைப் பின்பற்றிப் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை இருக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது போன்ற பேரிடர் சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்கான அரசின் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. தொடர்ந்து, மக்களும் தங்களது பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.