இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகை தந்துள்ள பிரதமர் மோடி, நேற்று (ஜூலை 26) தூத்துக்குடியில் ரூ.4,900 கோடி மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவடைந்த திட்டப் பணிகளை நாட்டுக்கு அர்ப்பணித்தும் வைத்தார். இதில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலைய திறப்பும் அடங்கும். நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு, அங்கிருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்த பிரதமர், இங்குள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, இன்று காலை, அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் திருக்கோயில் வளாகத்தில் நடைபெறும் முதலாம் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் முற்பகல் 11:50 மணிக்கு புறப்படவுள்ளார்.
கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர்
கங்கைகொண்ட சோழபுரம் வந்தடைந்ததும், சாலை மார்க்கமாக காரில் சென்றபடியே மக்களைச் சந்திக்கும் பிரதமர், நண்பகல் 12 மணியளவில் பெருவுடையார் கோயிலை வந்தடைவார். கோயில் நுழைவு வாயிலில் பிரதமருக்கு திருவாவடுதுறை ஆதீனம் தலைமையில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்படவுள்ளது.
தொடர்ந்து, கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், சண்டிகேசுவரர், விநாயகர், முருகன் ஆகிய சந்நிதிகளுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்யவுள்ளார். வாரணாசியில் இருந்து கொண்டு வரப்படும் கங்கை நீரைக் கொண்டு பிரகதீஸ்வரருக்கு மகா அபிஷேகம் நடைபெறும். பிரதமர் மோடி, சாமி தரிசனம் செய்த பின்னர் 3 நிமிடங்களுக்குக் கோவிலில் அமர்ந்து தியானம் செய்ய உள்ளதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து கோவில் சிற்பங்களையும், தொல்லியல் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியையும் பார்வையிடவுள்ளார்.
நினைவு நாணயம் வெளியீடு, இளையராஜாவின் சிம்பொனி
இதனைத் தொடர்ந்து, மத்திய கலாசாரத் துறை சார்பில் நடைபெறும் முதலாம் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழா, கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயில் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா ஆகிய முப்பெரும் விழாக்களில் பங்கேற்று ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார்.
விழாவில் இசையமைப்பாளர் இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சிகள் நிறைவடைந்த பின்னர், பிரதமர் மோடி மதியம் 1:45 மணியளவில் அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு, பிற்பகல் 2:25 மணிக்கு திருச்சி விமான சென்றடைவார். அதனைத்தொடர்ந்து, அங்கிருந்து 2:30 மணிக்கு தனி விமானம் மூலம் பிரதமர் மோடி டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.