பயங்கரவாதத்தை நசுக்க வேண்டும்
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடூரம் பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது. பயங்கரவாதத்தை கடுமையாக நசுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மேலும், உயிரிழந்த குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். பாஜக அரசின் தவறான கொள்கை மற்றும் ஜம்மு காஷ்மீரில் விவகாரத்தில் அவர்கள் எடுத்த நடவடிக்கையால் இவ்விளைவுகள் உருவாகியுள்ளது.
அமித்ஷா பதவி விலக வேண்டும்
அதுமட்டுமில்லாமல் உளவுத்துறை தோல்வி அடைந்துள்ளது என்பதைத்தான் இச்சம்பவம் உறுதிப்படுத்தி உள்ளது. ஆர்டிகல் 370 அகற்றிவிட்டால் அங்கே பயங்கரவாதம் இருக்காது பாஜக கூறிய நிலையில் அங்கே சுற்றுலாப் பயணிகள் சுதந்திரமாக போகலாம் என்ற அடிப்படையில் நம்பி சென்ற சுற்றுலாப் பயணிகள் இன்று படுகொலையாகி இருக்கிறார்கள். எனவே அமித்ஷா தனது பதவியை விலக வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது என தெரிவித்தார்.