தமிழ்நாடு

வரலாற்றில் புதிய உச்சம்: தங்கம் விலை அதிரடி உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

சென்னையில் இன்று ஒரே நாளில் 22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

வரலாற்றில் புதிய உச்சம்: தங்கம் விலை அதிரடி உயர்வு.. எவ்வளவு தெரியுமா?
Gold Price Reaches New All-Time Peak
கடந்த சில நாட்களாகவே உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 அதிகரித்து, இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

கடந்த செவ்வாய்கிழமை (செப்.9) அன்று ஒரு சவரன் தங்கம் ரூ.81,200க்கு விற்பனையான நிலையில், கடந்த இரண்டு நாட்களாக அதன் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

தொடரும் விலை உயர்வு

இன்று ஒரே நாளில் 22 காரட் தங்கம் சவரனுக்கு ரூ.720 அதிகரித்து ரூ.81,920க்கு விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிராமுக்கு ரூ.90 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.10,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. வரலாற்றில் புதிய உச்சத்தை தங்கம் தொட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

வெள்ளி விலையும் உயர்வு

தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.142க்கும், கிலோவுக்கு ரூ.2,000 உயர்ந்து ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,42,000க்கும் விற்பனையாகிறது.

சர்வதேச சந்தையில் ஏற்பட்ட சில பொருளாதார மாற்றங்கள், டாலரின் மதிப்பு, மற்றும் உலகளாவிய சந்தை போக்குகள் ஆகியவை இந்த விலை ஏற்றத்திற்கு காரணமாக இருக்கலாமென வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.