தமிழ்நாடு

தமிழர்களுக்கு பெருமை சேர்த்தவர் மோடி-மதுரை ஆதினம் வீடியோ வெளியிட்டு புகழாரம்

பிரதமர் நரேந்திர மோடி இலங்கைத் தமிழர்களுக்கு தனி நாடு அமைத்துக் கொடுக்க வேண்டும்

தமிழர்களுக்கு பெருமை சேர்த்தவர் மோடி-மதுரை ஆதினம் வீடியோ வெளியிட்டு புகழாரம்
பிரதமர் மோடி மற்றும் மதுரை ஆதினம்


பிரதமருக்கு மதுரை ஆதினம் பாராட்டு

பிரதமர் மோடி இன்று ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பனில் புதிய ரயில் பாலத்தை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருவதால் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார் பிரதமர் மோடி.

இதனால் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதமரின் வருகையால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று பாம்பனில் புதிய ரயில் பாலம் திறந்து வைப்பதற்கு மதுரை ஆதினம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கச்சத்தீவை மீட்க வேண்டும்

இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள மதுரை ஆதினம், “ ராமேஸ்வரத்தில் ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்ட பாம்பன் பாலத்தில் செல்லவே எனக்கு நெருடலாக இருந்தது. நான் சன்னிதானம் ஆன பிறகு இதுவரை ராமேஸ்வரம் சென்றதில்லை. பிரதமர் நரேந்திர மோடி தான் ராமேஸ்வரத்தில் சிறப்பான முறையில் புதிய தூக்கு பாலத்தை அமைத்து தமிழர்களுக்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்ததற்கு உளமாற எனது பாராட்டுக்கள்.

இலங்கை தமிழர்களுக்காக கோரிக்கை வைத்திருக்கிறேன். அதையும் நிறைவேற்றி இருக்கிறார் இலங்கை தமிழர்கள் பல்வேறு திட்டங்கள் அறிவித்திருக்கிறார். கச்சத்தீவு தூக்கி கொடுத்தது காங்கிரஸ்தான் மற்ற யாரையும் குறை சொல்லவில்லை, நேரம் வரும்போது கூறுகிறேன். கச்சத்தீவை தூக்கி கொடுத்துவிட்டு தற்போது மீட்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். இந்திரா காந்தி கொடுத்த கச்சத்தீவை மீட்க வேண்டும்.

இலங்கை தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு

இலங்கையில் வாழும் தமிழர்களை நிரந்தர தீர்வு ஏற்படுத்துவேன் என கூறிய பிரதமருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். இலங்கைத் தமிழர்களுக்கு தனி நாடு அமைத்துக் கொடுக்க வேண்டும். அதற்கான ஆவணம் செய்வார் என நம்பிக்கை இருக்கிறது. அன்னை மீனாட்சியின் அருள் ஆசி கிடைத்து என்றும் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் என மனதார பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.