திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்
உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் வெளிமாவட்டம், வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள், ஆன்மீக பக்தர்கள் என லட்சக்கணக்கில் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து அண்ணாமலையாரை தரிசனம் செய்து வட்டு பின்னர் 14 கிலோமீட்டர் கிரிவலம் செல்வது வழக்கம்.
இந்நிலையில் இன்று ராம நவமி மற்றும் விடுமுறை தினம் என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே கடும் வெயிலிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
சாமி தரிசனம்
திருக்கோயிலின் ஆகம விதிப்படி அதிகாலை 4:30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு அம்மணி அம்மன் கோபுரம் மற்றும் ராஜகோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்ட பக்தர்கள் 4 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து பின்னர் அண்ணாமலையாரை தரிசனம் செய்துவிட்டு பின்னர் திருமஞ்சன கோபுர வழியாக வெளியே செல்கின்றனர்.
மேலும் நீண்ட வரிசையில் வரும் பக்தர்களுக்கு திருக்கோயில் சார்பாக நீர்மோர் வழங்கப்பட்டு வருகிறது. அண்ணாமலையாரை தரிசனம் செய்த பக்தர்கள் பின்னர் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளதால் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு
திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்...நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்
ராமநவமி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்