தமிழ்நாடு

பிரதமர் மோடியுடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு!

டெல்லியில் பிரதமர் மோடியுடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பஹல்காம் தாக்குதல் மற்றும் எல்லையில் நிலவும் சூழல் குறித்தும் முக்கியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

பிரதமர் மோடியுடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு!
பஹல்காம் தாக்குதல் சம்பவ எதிரொலியாக நாடு முழுவதும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிற்கு பாகிஸ்தானுக்கும் இடையேயான, சிந்து நதி ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் என பாகிஸ்தானுக்கு எதிராக மத்திய அரசு அறிவிப்புகளை வெளியிட்டது.

இதனைத்தொடர்ந்து, பாகிஸ்தானும் 1972 ஆம் ஆண்டு போர் நிறுத்தத்திற்கான சிம்லா அமைதிக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து, எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

முன்னதாக முப்படைத் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் உடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பாதுகாப்பு உத்திகள் மற்றும் தயார் நிலை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகத் கூறப்படுகிறது. இதனை முடித்துக் கொண்டு பிரதமரை சந்தித்துப் பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று மீண்டும் அவருடன் டெல்லியில் ஆலோசனை நடத்தினார்.

எல்லைகளில் பாதுகாப்பு தயார் நிலை, நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை சூழல் குறித்து அப்போது முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்திய பாதுகாப்புத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக் குழு இன்று பிற்பகல் 3 மணிக்கு கூட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.