தமிழ்நாடு

“வேற மாதிரி தொழில் செஞ்சதால கொன்னேன்”-அழுகிய நிலையில் பெண் உடல் மீட்கப்பட்ட வழக்கில் கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம்

பாலியல் தொழிலாளி என்பதை மறைத்ததால் கள்ளக்காதலன் வெறிச்செயல்

  “வேற மாதிரி தொழில் செஞ்சதால கொன்னேன்”-அழுகிய நிலையில் பெண் உடல் மீட்கப்பட்ட வழக்கில் கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம்
கள்ளக்காதலனால் கொலை செய்யப்பட்ட சரஸ்வதி
விருத்தாச்சலம் மாவட்டத்தை சேர்ந்தவர் சரஸ்வதி(38). இவர் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையை சேர்ந்த கணேசமூர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். குறிப்பாக மூத்த மகன் சற்று மூளை வளர்ச்சி குன்றியவர் என கூறப்படுகிறது.

காதல் திருமணம்

மேலும் சரஸ்வதி கடந்த ஒன்றை மாதங்களுக்கு முன்பு சென்னை கொளத்தூர் தனம்மாள் நகர் முதல் தெருவில் வீடு வாடகைக்கு எடுத்து தன் இரு பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். கணவர் கணேசமூர்த்தி கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருகிறார். பிள்ளைகள் இருவரும் கொளத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் நிலையில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சரஸ்வதி தன் பிள்ளைகளுடன் கும்மிடிப்பூண்டி சென்று கணவருடன் இருந்துவிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருந்தாக தெரிகிறது.

இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி பிள்ளைகளுடன் கணவரை பார்க்க சென்ற சரஸ்வதி அவர்களை விட்டு விட்டு இரவு கொளத்தூரில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளார். மறுநாள் கணேசமூர்த்தி தன் மனைவி சரஸ்வதியை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றபோது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்து.

பெண் உடல் அழுகிய நிலையில் மீட்பு

இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாத கணேசமூர்த்தி மீண்டும் மனைவி சரஸ்வதியை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றும் முடியாமல் போனதால் சந்தேகமடைந்து தன் நண்பர்களான துரைராஜ், தேவசகாயம் ஆகியோரிடம் தகவலை கூறி வீட்டிற்கு சென்று மனைவியை பார்த்து விட்டு வருமாறு தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே சரஸ்வதி வசிக்கும் வீட்டின் முதல் தளத்தில் வசித்து வரும் முனுசாமி என்பவர் சரஸ்வதி வீட்டில் துர்நாற்றம் வீசியதை பார்த்து உடனே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் கொளத்தூர் போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது கதவு சாத்திய நிலையில் இருப்பதை கண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது சரஸ்வதி உடல் அழுகிய நிலையில் குடல் வெளியே வந்தவாறு இறந்து கிடப்பதை பார்த்து உடனே அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பாலியல் தொழில்

பின்னர் இது குறித்து சரஸ்வதி கணவருக்கு போலீசார் தகவல் தெரிவித்ததுடன் சரஸ்வதி இறப்பு குறித்து சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் சரஸ்வதி பயன்படுத்தி வந்த இருசக்கர வாகனம், அவர் அணிந்திருந்த அரை சவரன் தங்க மோதிரம் மற்றும் செல்போன் திருடு போனது தெரியவந்தது. மேலும் சரஸ்வதி புகைப்பிடித்தல், மது அருந்துதல் உள்ளிட்ட அனைத்து விதமான போதை பழக்கத்திற்கு அடிமையானதும் தெரியவந்தது.

மேலும், உயிரிழந்த சரஸ்வதியை பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக விபச்சார தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்ததும், பின்னர் அவர் சில நாட்களுக்கு பிறகு ஜாமினில் வெளியே வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

கள்ளக்காதலன் வாக்குமூலம்

இதனையடுத்து போலீசார் சரஸ்வதி எப்படி இறந்தார்? அவரது பைக், மோதிரம், செல்போன் ஆகியவை காணாமல் போகியுள்ளதால் அவரை யாரேனும் கொலை செய்து பொருட்களை திருடி சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை செய்த கான்பூரைச் சேர்ந்த மொய்தீன் அன்சாரியை போலீசார் கைது செய்தனர்.

அண்ணாநகரில் அயன் செய்யும் கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. “உண்மையாகவே காதலித்தேன்.ஆனால் ஏமாற்றிவிட்டாள். மதுபோதையில் அடித்தேன். உயிரிழந்துவிட்டார்” என கைதான இளைஞர் அன்சாரி போலீசாரிடம் கண்ணீர் மல்க வாக்குமூலம் அளித்துள்தாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

சிறையில் அடைப்பு

மேலும் சரஸ்வதி திருமணமானதை மறைத்து தனது கணவரை அண்ணன் எனக்கூறி இளைஞரை காதலித்து வந்தாகவும், இருவரும் ஒன்றாக இருப்பதற்காக கொளத்தூர் பகுதியில் வீடு எடுத்து தனிக்குடித்தனம் நடத்தி வந்த நிலையில் சம்பவத்தன்று இருவரும் அதிகளவில் மதுபானம் அருந்திய நிலையில் சரஸ்வதிக்கு செல்போன் அழைப்பு வந்ததால் அது குறித்து கேட்டப்போது வாக்குவாதம் ஏற்பட்டு சரஸ்வதியை அன்சாரி தாக்கியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

அதில் சரஸ்வதி மூச்சு பேச்சு இல்லாமல் இருந்ததால் செல்போனையும், இருசக்கர வாகனத்தையும் எடுத்து கொண்டு தப்பியோடியுள்ளதும் தெரியவந்துள்ளது. அவர் பாலியல் தொழிலாளி என்பது தனக்கு எதுவும் தெரியாது என்றும், ஏமாற்றியதால் ஆத்திரத்தில் கொலை செய்து விட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். கைதான மொய்தீன் அன்சாரியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.