தமிழ்நாடு

மணல் குவாரி திறக்க வலியுறுத்தல்.. லாரி உரிமையாளர்கள் சங்கம் போராட்டம் அறிவிப்பு..!

தமிழ்நாடு மணல் உரிமையாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தவுள்ளதாகவும், மணல் குவாரிகள் திறக்கப்படும்வரை காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக திருச்சியில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

மணல் குவாரி திறக்க வலியுறுத்தல்..  லாரி உரிமையாளர்கள் சங்கம் போராட்டம் அறிவிப்பு..!
லாரி உரிமையாளர்கள் சங்கம் போராட்டம் அறிவிப்பு
தமிழ்நாடு மணல் உரிமையாளர் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு மணல் லாரிகள் உரிமையாளர்கள் சம்மேளனம் இணைந்து அறிவிப்பு மணல் குவாரிகளை திறக்கும் வரை மணல் லாரி உரிமையாளர்கள் தமிழகத்தில் காலவரையற்ற போராட்டம் நடத்தப்போவதாக திருச்சியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மணல் உரிமையாளர் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு மணல் லாரிகள் உரிமையாளர்கள் சமேளனம் இணைந்து ஆலோசனை கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து அருகில் உள்ள ஹோட்டலில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின்னர் நிர்வாகி யுவராஜ் மற்றும் செல்ல ராஜாமணி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அவர், மே மாதம் 23 ஆம் தேதி கால வரலாற்றை வேலை நிறுத்தம் தொடர் போராட்டங்களில் ஈடுபட முடிவு செய்யப்பட்டுள்ளோம்.

மணல் குவாரி திறக்கும் வரை தொடர்ந்து லாரி உரிமை சங்கம் போராட்டத்தில் ஈடுபடும்,
எம் சாண்டு விலை குறைக்கப்பட்டதாக தெரிவித்தும் இதுவரை விலைகள் குறைக்கப்படவில்லை.

5 வருடம் வரை அனுமதி கொடுத்த குவாரிகளுக்கு தற்போது அரசு 30 ஆண்டுகளுக்கு அனுமதியை வழங்கி அரசாணை வெளியிட்டு உள்ளது. இந்த அரசாணையை எதிர்த்து நாங்கள் போராடாமல் சும்மா இருக்க முடியாது எனவே இந்த அரசாணையை திரும்ப பெறும் வரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம்.

எம் சாண்ட் விற்பனையை அரசு எடுத்து நடத்த வேண்டும். தொடர்ந்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சம்மேளனம், செல்லராஜாமணி மாநிலத் தலைவர் கூறுகயில், மண்குவாரிகள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக எடுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு காரணமாக அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக எடுத்துச் செல்வதை தடை செய்ய வேண்டும்.

எம்சாண்ட் ஆயிரம் ரூபாய் குறைக்கப்படும் என கூறியும் இதுவரை விலை குறைக்கப்படும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. லாரி தொழில் மற்றும் கட்டுமான தொழிலை பாதுகாப்பு வகையில் வருகிற 23 ஆம் தேதி லாரிகள் நிறுத்தி வைத்து தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறும்.

இதன் காரணமாக அரசுக்கு நாள் ஒன்றிற்கு ரூபாய் 10 கோடி வருமான இழப்பு ஏற்படுத்தப்படுகிறது.இது லாரி உரிமையாளர்களுக்கு மற்றும் கட்டுமானம் கம்பி, சிமெண்ட் உள்ள தேவைகள் அதிகளவு அரசுக்கு பாதிப்பு ஏற்படும். மேலும், இந்த போராட்டத்தால் பணியாளர்கள் உரிமையாளர்கள் என 55,000 பேர் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தனர்