கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் சந்திரமகுண்டு(26). சாப்ட் வேர் நிறுவன ஊழியரான இவர் சொந்த வேலையாக புதுச்சேரி சென்று விட்டு நேற்று முன்தினம் மதியம் புதுச்சேரி-தாதர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பெங்களூருவிற்கு பயணம் செய்தார். காட்பாடியில் பார்த்த போது அவர் வைத்திருந்த பை காணாமல் போனது தெரியவந்தது.
அதில் இவரது விலை உயர்ந்த ஐ போன், விவோ போன், ஏர்பட்ஸ், சார்ஜர், துணிமணிகள், ஆதார் அட்டை, டிரைவிங் லைசென்ஸ் என 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய பொருட்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை மர்ம ஆசாமி திருடிச்சென்றதும் தெரியவந்தது. இதுதொடர்பாக காட்பாடி ரயில்வே போலீசில் சந்திரமகுண்டு புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், ரயில் நிலையம் மற்றும் காட்பாடியில் இருந்து வேலூர் செல்லும் சாலை உட்பட பல்வேறு இடங்களில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து குற்றவாளியை அடையாளம் கண்டனர்.
இந்நிலையில், நேற்று காட்பாடி ரயில் நிலைய நடைமேடை 2-ல் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றி்த் திரிந்தவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் சென்னை சேத்துப்பட்டு இபி ஆபீஸ் எதிரில் பிளாட்பாரத்தில் வசிக்கும் விஜய் (எ) கைச்சப்பி விஜய் (22) என்பதும் சந்திரமகுண்டுவிடம் செல்போன் திருடியதும் தெரியவந்தது.
தொடர்ந்து அவரிடம் இருந்து 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 2 செல்போன்கள் உட்பட திருட்டு போன பொருட்களை போலீசார் கைப்பற்றினர். இதையடுத்து விஜய் மீது வழக்குப் பதிவு செய்த காட்பாடி ரயில்வே போலீசார் அவரை வேலூர் ஜேஎம்4 கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.