நம்ம எல்லோருக்கும் தேநீர் (Tea) என்றால் பிடித்தமான ஒன்றாகவும், வாழ்வோடு கலந்துவிட்ட ஒன்றாகவும் மாறிவிட்டது. ஒரு வேளை உணவில்லை என்றாலும், தேநீர் இருந்தாலும் போதும் இன்றைய பொழுதை கழித்து விடலாம் என்றே பலரும் வாழ்ந்து வருகின்றனர்.
வேலைப்பார்க்கும் இடத்தில் ஏதேனும் பிரச்னை என்றால், ஒரு தேநீர் ( Tea ) குடிச்சா எல்லாம் சரியாகிடும் என்பது என்று சொல்பவர்களுக்கு வேலையில் உள்ள பிரச்னையை மறக்க செய்வது இந்த ஒரு கப் டீ தான். (Tea is a Emotion) வாழ்ந்து வரும் பல லட்சக்கணக்கான இளைஞர்களுக்காகவே இன்றைய தினம் கொண்டாடப்படுகிறது.
சர்வதேச தேநீர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 21ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இது உலகம் முழுவதும் தேநீர் உற்பத்தி, சந்தை, மற்றும் அதன் பண்பாட்டு முக்கியத்துவத்தை அறியவும், தேநீர் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அமைக்கப்பட்டது. இந்த தினத்தை ஐக்கிய நாடுகள் சபை 2019 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. இந்த நாளின் முக்கிய நோக்கம், நிலைத்த வளர்ச்சி, ஏற்றுமதி வர்த்தகம், மற்றும் தேநீர் விவசாயிகளின் உரிமைகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும்.
இந்த தினத்தை கொண்டாடும் வகையில் தஞ்சை நீதிமன்ற சாலையில் உள்ள ஆவின் தேநீர் நிலையத்தில் பணியாற்றும் தேநீர் நிபுணர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தி அவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மேலும் கடைக்கு வரக்கூடிய வாடிக்கையாளர்கள் 50 நபர்களுக்கு இலவசமாக தேநீரும் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியினை தஞ்சை மாவட்ட வணிகர் சங்க கூட்டமைப்பினர் செய்திருந்தனர்.