தமிழகத்தில் நிபா வைரஸ் பரவாமல் இருக்க கேரளா எல்லையில் உள்ள தமிழக மாவட்டங்களில் சுகாதாரத் துறை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோவையிலிருந்து கேரளா மாநிலம் செல்லும் சாலையில் வாளையார் பகுதியில் உள்ள சோதனைச் சாவடிகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் சோதனை செய்து கண்காணிப்பில் ஈடுபட்டு நோய் தடுப்பு மருந்துகளைத் தெளிப்பது வழக்கமாக உள்ளது.
இந்நிலையில் இன்று, அங்கு உள்ள சோதனைச் சாவடிக்கு சென்றபோது சுகாதாரத்துறை முகாமில் இரண்டு, மூன்று வாலிபர்கள் மட்டும் அமர்ந்து உள்ளதாகவும், எந்தவித சோதனைகளும், நோய் தடுப்பு மருந்துகள், தெளிக்காமல், எந்தவித பரிசோதனையுமின்றி இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் நிபா வைரஸ் தமிழகத்திற்கு பரவும் அபாயம் உருவாகி உள்ளது.
வாளையார் சோதனைச் சாவடியில் தற்காலிகமாகத் தகரத்தில் முகாம் அமைக்கப்பட்டு இருந்தாலும், அங்குச் சுகாதாரத் துறை ஊழியர்கள் பணியில் இல்லாத நிலை காணப்படுகிறது.
இதன் காரணமாக, மாநில எல்லையைக் கடந்து வரும் வாகனங்கள் யாவும் நேரடியாகக் கோவை மாவட்டத்துக்குள் நுழைந்து விடுகின்றன. ஹைவேயிலிருந்து வாகனங்களைச் சேவை சாலைக்கு மாற்றி, அங்குத் தான் சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.
ஆனால், இதற்கான போலீசார் மற்றும் அதிகாரிகள் பணியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. காவல் துறையின் கண்காணிப்பு இல்லாததால், பரிசோதனை முறையே கடைபிடிக்கப்படவில்லையெனச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் நிபா வைரஸ் போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் பரவ வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
மாநில எல்லைகளில் சுகாதாரத்துறை மற்றும் காவல்துறை இணைந்து கட்டுப்பாடுகளைக் கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. மேலும், தமிழக - கேரள எல்லைகளில் பாதுகாப்பு தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.