சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,290 க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் ரூ.66,320க்கு விற்பனையாகிறது
இந்திய பங்குச் சந்தைகள் எல்லாம் வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சியினை தொடர்ந்து சந்தித்து வந்த நிலையில், தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து குறைந்து வந்தது. ஆனால் திடீரென்று இன்று தங்கத்தில் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது.
பொதுவாகவே மக்களிடம் தங்கத்தில் முதலீடு செய்யும் வழக்கம் அதிகரித்து வருகிறது. பங்குசந்தைகளில் ஏற்படும் சரிவு காரணமாக அனைவரும் பாதுகாப்பான முதலீடு செய்ய விரும்புவது தங்கத்தில் தான். அதன் காரணமாகவே தங்கத்தின் மீதான முதலீட்டில் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கடந்த ஒரிரு மாதங்களாகவே விண்ணை முட்டும் அளவிற்கு தங்கத்தின் விலை ஏறி வந்தது. இந்நிலையில் ஏப்ரல் 1 ஆம் தேதி அமெரிக்கா அதிபர் டிரம்ப், இந்தியா, சீனா உட்பட மற்ற நாடுகள் மீது பரஸ்பர வரி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். இதனால், உலகளவில் பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தது. அதனால் தங்கம் விலையிலும் நாளுக்கு நாள் மாற்றம் ஏற்பட்டது.
தங்கம் விலை கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி சவரனுக்கு ரூ.1,280 குறைந்து ரூ.67,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.66,480 விற்பனையானது. தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.200 குறைந்து ரூ.66,280-க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஏப்ரல் 8 ஆம் தேதியான நேற்று சவரனுக்கு ரூ.480 குறைந்து, ஒரு சவரன் ரூ.65,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் ஏப்ரல் 9 ஆம் தேதியான இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.520 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.66,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடந்து, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.102, ஒரு கிலோ 1,02,000க்கும் விற்பனையாகிறது.
தமிழ்நாடு
Gold Rate Today: தங்கம் விலை திடீர் ஏற்றம்..எவ்வளவு தெரியுமா?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,290 க்கும், சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ஒரு சவரன் ரூ.66,320க்கு விற்பனையாகிறது.