சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ச்சியாகச் சரிவைச் சந்தித்து வந்த நிலையில், இன்று காலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் மீண்டும் ரூ.92,000-க்கு விற்பனையாகிறது.
சமீபத்திய விலைச் சரிவு
தங்கம் விலை கடந்த வாரத்தில் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்ட பிறகு, இந்த வாரத்தில் சரிவைச் சந்தித்தது. அக்டோபர் 22ஆம் தேதி சவரனுக்கு ரூ.3,680 குறைந்த நிலையில், அக்டோபர் 23ஆம் தேதி ரூ.320 குறைந்து விற்பனையானது. தொடர்ந்து மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமை அன்று சவரனுக்கு ரூ.800 குறைந்து, ஒரு சவரன் ரூ.91,200-க்கு விற்பனையானது.
இன்று காலை நிலவரம்
தொடர்ச்சியான இந்தச் சரிவுக்குப் பிறகு, இன்று காலை தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.100 உயர்ந்து ரூ.11,500-க்கு விற்பனையாகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.800 உயர்ந்து மீண்டும் ரூ.92,000-க்கு விற்பனையாகிறது.
வெள்ளி விலை நிலவரம்
தங்கத்தின் விலை உயர்ந்துள்ள போதும், வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி நேற்றைய விலையிலேயே ரூ.170-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1.70 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்கள், அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் உலகளாவிய சந்தை நிலவரங்களே இந்தத் தொடர் விலை ஏற்ற இறக்கங்களுக்குக் காரணம் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

LIVE 24 X 7