தங்கத்தின் விலையில் கடந்த ஒரு வாரமாக நிலவி வந்த தொடர் சரிவுக்குப் பிறகு, இன்று காலை ஆபரணத் தங்கத்தின் விலையில் மீண்டும் ஏற்றம் காணப்பட்டுள்ளது. அதன்படி ஒரு சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது.
தங்கம் விலை சரிவு
தீபாவளிப் பண்டிகையை ஒட்டித் தங்கத்தின் விலை அதிவேகமாக உயர்ந்தது. குறிப்பாக, கடந்த அக்டோபர் 17ஆம் தேதி, ஒரு சவரன் தங்கம் வரலாறு காணாத உச்சமாக ரூ.97,600-க்கு விற்பனை செய்யப்பட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதன் பின்னர், கடந்த ஒரு வாரமாகத் தங்கம் விலை சரியத் தொடங்கியது. நான்கு நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.4,000 வரை குறைந்து இருந்தது. நேற்று (அக்.23) நிலவரப்படி, 22 கேரட் தங்கம் ஒரு சவரன் ரூ.92,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய காலை விலை நிலவரம்
நேற்றைய சரிவுக்குப் பிறகு, இன்று காலை தங்கத்தின் விலையில் மீண்டும் ஏற்றம் காணப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.40 உயர்ந்து ரூ.11,540-க்கு விற்பனையாகிறது. இதனால், ஒரு சவரன் தங்கம் ரூ.320 உயர்ந்து ரூ.92,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை தொடர்ந்து சரிவு
தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலை மட்டும் தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்றும் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.3 குறைந்து ரூ.171-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தை மாற்றங்கள், டாலரின் மதிப்பு மற்றும் உலகளாவிய சந்தை நிலவரங்களே இந்தத் தொடர் விலை மாற்றங்களுக்குக் காரணமாக இருக்கலாம் எனப் பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

LIVE 24 X 7