தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் இரண்டாவது முறையாகச் சரிவைக் கண்டுள்ளது. மாலை நேர நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,280 குறைந்து மொத்தமாக ரூ.92,320க்கு விற்பனையாகிறது.
தொடர் சரிவில் தங்கம்
அதிரடியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, கடந்த சில நாட்களாகக் குறைந்து வருகிறது. கடந்த அக்டோபர் 18ஆம் தேதி சவரனுக்கு ரூ.1,600 குறைந்து ரூ.96,000க்கு விற்பனையானது. தீபாவளியன்று சவரனுக்கு ரூ.640 குறைந்து ரூ.95,360க்கு விற்பனையான நிலையில், நேற்று மீண்டும் ரூ.640 உயர்ந்து ரூ.96,000க்கு விற்பனையானது.
இன்று காலை மற்றும் மாலை நிலவரம்
இன்று காலை ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.2,400 குறைந்து ரூ.93,600க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.300 குறைந்து ரூ.11,700-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், இன்று மாலை வர்த்தகம் நிறைவடையும்போது, தங்கம் விலை மேலும் குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.1,280 குறைந்து, ஒரு சவரன் ரூ.92,320க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.160 குறைந்து, ஒரு கிராம் ரூ.11,540க்கு விற்பனையாகிறது. ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.3,680 (ரூ.2,400 + ரூ.1,280) குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலையும் குறைந்தது
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று கணிசமாகக் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து, ரூ.175க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,75,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ச்சியான விலை இறக்கம் காரணமாக நகை வாங்குவோர் மத்தியில் நிம்மதி ஏற்பட்டுள்ளது.