தங்கத்தின் விலையில் இன்று காலை ஏற்றம் காணப்பட்ட நிலையில், மாலை கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இன்று மாலை நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்து, ரூ.91,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு நாளில் ஏற்பட்ட பெரும் மாற்றம்
கடந்த ஒரு வாரத்தில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், இன்று காலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.92,320-க்கு விற்பனையானது. ஆனால், இந்த ஏற்றம் நீடிக்கவில்லை. இன்று மாலை நிலவரப்படி, தங்கம் விலை அதிரடியாகச் சரிவைக் கண்டுள்ளது.
ஒரு சவரன் தங்கம் ரூ.1,120 குறைந்து ரூ.91,200 ஆகவும், ஒரு கிராம் தங்கம் ரூ.140 குறைந்து ரூ.11,400 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி தங்கம் ஒரு சவரன் ரூ.97,600 என்ற வரலாற்று உச்சத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலை நிலவரம்
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று மேலும் குறைந்துள்ளது. இன்று காலை ஒரு கிராம் ரூ.171-க்கு விற்பனையான நிலையில், தற்போது மேலும் ரூ.1 குறைந்து, ஒரு கிராம் ரூ.170-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,70,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை ஒரு நாளில் ரூ.92,000-க்கும் கீழே சரிந்திருப்பது, நகை வாங்குவோர் மத்தியில் தொடர்ந்து நல்ல வாய்ப்பாகப் பார்க்கப்படுகிறது.

LIVE 24 X 7