கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் வரும் 24ஆம் தேதி 62-வது மலர் கண்காட்சியுடன், கோடை விழா துவங்கவுள்ள நிலையில், இதில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, உணவு மற்றும் உணவு வழங்கல் துறை, சுற்றுலாத்துறை அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறும், இதனையடுத்து தரைப்பகுதியில் நிலவும் வெப்பத்தை சமாளிக்க ஏராளமான சுற்றுலாப்பயணிகள் கொடைக்கானலில் குவிந்து வருகின்றனர்.
கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளை மகிழ்விக்கும் விதமாக நகரின் மைய பகுதியில் உள்ள பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சி, கோடை விழா நடைபெறுவது வழக்கம், இந்நிலையில் இந்த வருடம் 62-வது மலர் கண்காட்சி வரும் 24ஆம் தேதி துவங்கி ஜீன் 1ஆம் தேதி வரை நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.
மேலும் மலர் கண்காட்சியில் லட்சக்கணக்கான பல்வேறு வண்ணங்களுடன் மலர் வகைகள் காட்சி படுத்தப்பட உள்ளது,இதில் மலர்களால் உருவாக்கப்படும் திண்டுக்கல் புவிசார் பெற்ற திண்டுக்கல் பூட்டு,மலைப்பூண்டு, கொய்யா கனி,செல்பி பாயிண்ட்,பூனை,பூ மரம் மற்றும் காய்கறி மற்றும் பழங்களால் உருவாக்கப்படும் யானை,மர அணில்,சிறுத்தை,பஞ்சவர்ணக்கிளி உள்ளிட்ட உருவங்கள் அமைக்கப்பட்டு காட்சிபடுத்தப்பட உள்ளது.
மேலும் கோடை விழாவில் பரத நாட்டியம்,சிலம்பம்,விளையாட்டி போட்டிகள்,படகு போட்டி,நாய்கள் கண்காட்சி உள்ளிட்டவைகள் நடைபெற உள்ளன, மேலும் மலர் கண்காட்சிக்காக நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது, பெரியவர்களுக்கு 75 ரூபாயும், சிறியவர்களுக்கு 35 ரூபாயும்,கேமராவிற்கு 50 ரூபாயும், வீடியோ கேமராவிற்கு 100 ரூபாய் பூங்கா நிர்வாகம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மலர் கண்காட்சியில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை, ஊரக வளர்ச்சித்துறை,உணவு மற்றும் உணவு வழங்கல் துறை,சுற்றுலாத்துறை அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளதாகவும் பேட்டியளித்தார்.
மேலும் கொடைக்கானல் பள்ளங்கி கோம்பை பகுதியில் புதிய சுற்றுலா தலமாக பெப்பர் அருவி அறிமுகப்படுத்தி உள்ளதாகவும், அதற்கான மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதாகவும் இந்த அருவிக்கு செல்ல சுற்றுலாப்பயணி நபர் ஒருவருக்கு நூறு ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.