தமிழ்நாடு

இளம்பெண் மற்றும் போலீசாரை தாக்கிய மதுபோதை இளைஞர்..!

சாலையில் இளம்பெண்ணை தாக்கிய சம்பவத்திற்கு விசாரணைக்கு சென்ற போலீசார் மீது மதுபோதை இளைஞர் தாக்குதலால் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இளம்பெண் மற்றும் போலீசாரை தாக்கிய மதுபோதை இளைஞர்..!
இளம்பெண் மற்றும் போலீசாரை தாக்கிய மதுபோதை இளைஞர்..!

சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலை பகுதியில் சாலையில் இளம்பெண் ஒருவரை, இளைஞர் ஒருவர் தாக்கிக் கொண்டிருப்பதாக வளசரவாக்கம் போலீசருக்கு தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு சென்றனர்.

இளம்பெண்ணை தாக்கிய இளைஞரிடம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டபோது மதுபோதையில் இருந்தவர் மதுரையை சேர்ந்த கோகுல்ராஜன்(23) என்பது தெரிய வந்தது.

மேலும், விசாரணை செய்து கொண்டிருக்கும்போதே தலைமை காவலர் சுனில் என்பவரை மதுபோதையில் இருந்த கோகுல்ராஜன் அவதூறாக பேசி சட்டையை பிடித்து கன்னத்தில் அடித்ததாக கூறப்படுகிறது. 

மேலும் அவரும் அந்த இளம்பெண்ணும் காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அளவுக்கு அதிகமான மதுபோதையில் இருந்ததால் எழுதி வாங்கிக்கொண்டு இன்று காலை விசாரணைக்கு காவல் நிலையம் வருமாறு போலீசார் அனுப்பி வைத்தனர்.

சாலையில் இளம்பெண்ணை தாக்கிய வழக்கில் விசாரணைக்கு சென்ற தலைமை காவலரை தாக்கிய சம்பவம் குறித்து வளசரவாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் தொடர்ந்து பெண்கள் மீது நடக்கும் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில், பெண்ணை தாக்கிய வழக்கில் விசாரனைக்கு சென்ற காவலரையே தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.