கோவில் மற்றும் பட்டு நகரம் என்று பெருமையாக அழைத்து வரக்கூடிய காஞ்சிபுரத்தை உலுக்கும் விதமாக தனியார் டேட்டிங் ஆப் வெளியிட்ட ஒரு சர்வேவால் காஞ்சிபுரம் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்து உள்ளனர்.
காஞ்சிபுரம் முதலிடம்
சில தினங்களுக்கு முன்பாக ( Ashley medision ) என்ற டேட்டிங் ஆப் திருமணத்தை தாண்டிய உறவில் இருப்பவர்களின் எண்ணிக்கையில் இந்திய அளவில் காஞ்சிபுரம் முதலிடம் பிடித்திருப்பதாக சமூக வலைதளங்களில் தரவுகளை வெளியிட்டது. இந்தத் தகவலானது சமூக வலைதளங்களில் தீ போன்று பரவி வரும் நிலையில், இதனை அறிந்த, காஞ்சிபுரம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் முகமானது மாவட்ட ஆட்சி தலைவர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து அரசு அதிகாரிகளும் பங்கேற்று இருந்தனர்.
ஆட்சியரிடம் பாஜகவினர் புகார்
அப்பொழுது பாஜக காஞ்சி மாநகர மேற்கு பகுதி தொழில் பிரிவு முன்னாள் தலைவர் காமேஷ் மற்றும் பாஜகவினருடன் காஞ்சிபுரம் மக்கள் மீது பொய்யான தகவல்களை பரப்பி வரும் தனியார் டேட்டிங் செயலினை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுபோன்ற பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பாமல் நிறுத்த வேண்டுமென பாஜகவினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்து புகார் மனு அளித்தனர்.