தமிழ்நாடு

ரயில் நிலையத்தில் குற்றவாளி தப்பி ஓட்டம்.. பொதுமக்களிடம் தகவலளிக்கக் காவல்துறை கோரிக்கை!

Criminal escapes from railway station | ரயில் நிலையத்தில் குற்றவாளி தப்பி ஓட்டம் பொதுமக்களிடம் தகவலளிக்கக் காவல்துறை கோரிக்கை | Police request information from the public!

 ரயில் நிலையத்தில் குற்றவாளி தப்பி ஓட்டம்.. பொதுமக்களிடம் தகவலளிக்கக் காவல்துறை கோரிக்கை!
ரயில் நிலையத்தில் குற்றவாளி தப்பி ஓட்டம்.. பொதுமக்களிடம் தகவலளிக்கக் காவல்துறை கோரிக்கை!
கோவை ரயில் நிலையத்தில் குற்றவாளியைக் கைது செய்ய வெஸ்ட் பெங்கால் போலீசார் சென்றபோது தப்பிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், பொதுமக்கள் தகவல் அளிக்கக் காவல் துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்தன் P. தம்பி (வயது 40) என்ற நபர், வெஸ்ட் பெங்கால் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில், போலீசாரின் கண்காணிப்பில் ரயிலில் கைது செய்து, அழைத்து வந்தபோது, கோவை ரயில் நிலையத்திலிருந்து தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆனந்தன் வெஸ்ட் பெங்கால் மாநில காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, காவல் துறையின் கண்காணிப்பில் கேரளாவின் ஆல்வா ரயில் நிலையத்திலிருந்து திருவனந்தபுரம் - சாலிமார் விரைவு ரயிலின் A1 பெட்டியில் ஜூலை 26 ம் தேதி இரவு அழைத்து வரப்பட்டுக் கொண்டு இருந்தார். ஜூலை 27 ம் தேதி அதிகாலை 2 மணி அளவில் கோயம்புத்தூர் ரயில் நிலையம் வந்தபோது, நடைமேடையில் நகரும் தருணத்தில் ரயிலிலிருந்து ஆனந்தன் தப்பிச் சென்று உள்ளார். அவருடன் பயணித்த வெஸ்ட் பெங்கால் போலீசார் உடனடியாகத் தேட ஆரம்பித்தும் ஆனந்தனைக் கைது செய்ய முடியவில்லை.

தற்போது அவரைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இவர் தொடர்பான தகவல் பொதுமக்களுக்குத் தெரிய வந்தால் உடனடியாக 94981 80937 அல்லது 94982 73577 என்ற எண்களில் போத்தனூர் ரயில்வே காவல் நிலைய காவல் துறையைத் தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.