பாம்பு கடித்தால் எந்தவிதமான மருத்தும் தேவையில்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது சர்ச்சையைக் கிளப்பியது. சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் சீமானுக்கு எதிரான கண்டனங்களை எழுப்பினர். இது தொடர்பாகச் சீமான் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவரும் தவெக பிரமுகருமான பாலசுப்பிரமணியன் என்பவர் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அறிவியல் விரோத கருத்து:
பாம்பு கடித்தால் எந்தவிதமான மருத்துவ சிகிச்சையும் தேவையில்லை என்றும் இயற்கையாகவே உயிர் பிழைக்க முடியும் என்றும் பொதுவெளியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார். இது ஒரு முற்றிலும் தவறான, அறிவியல் விரோத மற்றும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய கருத்து. இத்தகைய பேச்சுகள், பொதுமக்களின் உயிரைப் பணயம் வைப்பது மட்டுமல்லாமல், சமூகத்தில் குழப்பத்தையும், தேவையற்ற அச்சத்தையும் ஏற்படுத்துகின்றன.
மனநல பரிசோதனைக்குக் கோரிக்கை:
பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயபடும் சீமான் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த மனநிலை ஒரு பொறுப்பான தலைவருக்கு இருக்க வேண்டிய மனநிலையிலிருந்து விலகி இருப்பதாகக் கருதுகிறன். எனவே அவரது மனநலப் பரிசோதனை அத்தியாவசியமானது. சீமான் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்" என்று தவெக பிரமுகர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.