கோவை: மதுக்கரை சீராபாளையத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் சாக்கு மூட்டையில் வீசப்பட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து அவரது நண்பரைக் காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.
மதுக்கரை, சீராபாளையத்தைச் சேர்ந்த பாலுசாமி (49), பழுதான வாகனங்களை இழுத்துச் செல்லும் வாகனத்தை வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்தார். கடந்த 11-ஆம் தேதி, தனது வாகனம் பழுதாகி விட்டதாகக் கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியே சென்ற பாலுசாமி, அதன் பிறகு வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் எண்ணும் தொடர்பில் கிடைக்காததால், அவரது மனைவி பரமேஸ்வரி கடந்த 12-ஆம் தேதி மதுக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து பாலுசாமியைத் தேடி வந்த நிலையில், அவரது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் (50) மீது சந்தேகம் எழுந்தது. அவரைப் பிடித்து விசாரித்ததில், பாலுசாமியைக் கொலை செய்து, கோவையில் பொள்ளாச்சி சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரிக்கு எதிரே பாலத்தின் கீழ் உள்ள மழை நீர் வடிகாலில் உடலை வீசியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
கொலைக்குக் கள்ளக் காதல் விவகாரம்தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் தனிப்பட்ட பிரச்சினையா என எனப் பல்வேறுணங்களில் மகாலிங்கத்திடம் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.