தமிழ்நாடு

Ariyalur: ஜெயங்கொண்டத்தில் சிப்காட் தொழிற்பூங்கா... முதலமைச்சர் அடிக்கல்..

ஜெயங்கொண்டத்தில் தைவானை சேர்ந்த DEAN SHOES நிறுவனத்தின் காலணி தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

Ariyalur: ஜெயங்கொண்டத்தில் சிப்காட் தொழிற்பூங்கா... முதலமைச்சர் அடிக்கல்..
Ariyalur: ஜெயங்கொண்டத்தில் சிப்காட் தொழிற்பூங்கா... முதலமைச்சர் அடிக்கல்..

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மகிமைபுரத்தில் தைவானை சேர்ந்த DEAN SHOES நிறுவனத்தின் காலணி தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார் 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்து வருகிறார். முடிவுற்ற திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதுடன், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 

ஜெயங்கொண்டம் அருகே உள்ள மகிமைபுரத்தில் சிப்காட் தொழிற்பூங்காவில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், அமையவுள்ள DEAN SHOES நிறுவனத்தின் புதிய காலணி தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார். புதிய காலணி தொழிற்சாலையின் மூலம் அப்பகுதியை சேர்ந்த 15,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.  

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்
முன்னதாக ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் சாலையில் உள்ள நகராட்சி அலுவலகத்திற்கு அருகில் அமைக்கப்பட்டு இருந்த முன்னாள் முதல்வர் கலைஞர் முழு உருவ சிலையை  தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதனை அடுத்து கலைஞரின் முழு உருவ சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் திமுக முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அரியலூர் மாவட்டத்தில் சிமெண்ட் தொழிற்சாலைகள் மட்டுமே செயல்பட்டுவந்த சூழலில், முதல் முறையாக அமையவுள்ள இந்த சிப்காட் தொழிற்சாலை அப்பகுதி மக்களின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் அமையும் என்று அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.