சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு மின்னஞ்சல் (இ-மெயில்) மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. போலீசார் நடத்திய சோதனையில், அது புரளி எனத் தெரியவந்தது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக சென்னை காவல்துறை பாதுகாப்புப் பிரிவுக்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்துள்ளது. இது குறித்து ராயப்பேட்டை போலீசார் விரைந்து வந்து சோதனை நடத்தினர். சோதனையில், வெடிகுண்டு அல்லது சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மிரட்டல்
நேற்று (செப்.23) ஒரே நாளில் சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை நந்தம்பாக்கத்தில் அமைந்துள்ள டிரேட் சென்டர், மவுண்டில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையம், அண்ணா அறிவாலயத்திற்கு அருகிலுள்ள இ.பி. பாக்ஸ், பெரியமேட்டில் உள்ள நேரு விளையாட்டு மைதானம், கீழ்ப்பாக்கம் பிஎஸ்என்எல் அலுவலகம் மற்றும் நடிகர் எஸ்.வி. சேகரின் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் மிரட்டல் வந்துள்ளது.
நடிகர் எஸ்.வி. சேகரின் வீட்டிற்கு கடந்த 10 நாட்களில் மூன்றாவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
போலீசார் நடத்திய விசாரணையில், அனைத்து மிரட்டல்களும் புரளி எனத் தெரியவந்துள்ளது. அந்தந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலைய போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.