திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில், காவல்துறையினர் மீது கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்ட 29 வடமாநில தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் மீது கொலை முயற்சி உட்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வன்முறையாக மாறிய போராட்டம்
காட்டுப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த அமரேஷ் பிரசாத் என்ற வடமாநில தொழிலாளி, கடந்த 1 ஆம் தேதி இரவு எதிர்பாராத விதமாக தவறி விழுந்து உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு இழப்பீடு கோரி, சுமார் 1000-க்கும் மேற்பட்ட சக தொழிலாளர்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில், போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த வன்முறையில் செங்குன்றம் துணை ஆணையர் பாலாஜி உட்பட பல காவலர்கள் காயமடைந்தனர்.
இதையடுத்து, தொழிற்சாலை நிர்வாகம் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உறுதியளித்தது. பின்னர், உயிரிழந்த தொழிலாளியின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
29 பேர் சிறையில் அடைப்பு
இந்தச் சம்பவம் தொடர்பாக வன்முறையில் ஈடுபட்ட 110 வடமாநில தொழிலாளர்களைக் காவல்துறையினர் பிடித்து, ஒரு தனியார் திருமண மண்டபத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இந்தச் சம்பவம் குறித்து காட்டூர் காவல்துறையினர் கொலை முயற்சி, அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் உட்பட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
தொடர்ந்து, திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த 29 வடமாநில தொழிலாளர்கள் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு, அதிகாலையில் பொன்னேரி நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் அந்த 29 தொழிலாளர்களும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். எஞ்சிய தொழிலாளர்கள், மேற்கொண்டு வன்முறையில் ஈடுபட மாட்டோம் என எழுதி கையெழுத்து வாங்கப்பட்டு, மீண்டும் அவர்களது முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.