தமிழ்நாடு

சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. குழாய் மூலம் எரிவாயு வழங்க அனுமதி

சென்னையில் குழாய் மூலம் வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வழங்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. குழாய் மூலம் எரிவாயு வழங்க அனுமதி
Approval for project to provide natural gas to homes through pipeline in Chennai
சென்னையில் பல்வேறு பகுதிகளில் குழாய் மூலமாக வீடுகளுக்கு இயற்கை எரிவாயு வழங்கும் 48 கோடி மதிப்பிலான திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துள்ளது

சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், இறக்குமதி செலவை குறைப்பதற்காகவும், இயற்கை எரிவாயு பயன்பாட்டை அதிகரிக்க வீடுகளுக்கு குழாய் மூலமாக இயற்கை எரிவாயு வழங்கும் வகையிலான கொள்கைக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது. இதன்படி தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் இதை செயல்படுத்த தமிழ்நாடு அரசு அளித்தது. இதில் சென்னை, திருவள்ளூர், நாகை மாவட்டத்தில் உள்ள வீடுகளுக்கு குழாய் மூலமாக இயற்கை எரிவாயு வழங்கும் திட்டத்தை டோரண்ட் கேஸ் நிறுவனம் செயல்படுத்த உள்ளது.

சென்னையில் எந்த பகுதிகள்?

இதன்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வெட்டுவாங்கேணி, நீலங்காரை, திருவான்மியூர், அடையார், சேப்பாக்கம், பாரிஸ் கார்னர், ராயபுரம், தண்டயார்பேட்டை, திருவொற்றியூர், எண்ணூர், நெட்டுக்குப்பம் ஆகிய இடங்களில் குழாய் அமைக்கும் பணிக்கு தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

இந்த திட்டத்திற்காக மொத்தம் 466 கி.மீ நீளத்திற்கு குழாய் அமைக்கப்பட உள்ளது. இதில் 260 கி.மீ கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணைய பகுதிகளில் வருகிறது. இந்நிலையில், 48 கோடி செலவில் இந்த திட்டத்தை செயல்படுத்த டோரண்ட் கேஸ் நிறுவனத்திற்கு தமிழ்நாடு கடற்கரை ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

Read more:பனை சார்ந்து அட்டகாசமான 3 உணவு.. பக்குவமா செய்வது எப்படி?