கடந்த விடுதலை இரண்டாம் பாகத்தின் 25-வது வெற்றிநாளை முன்னிட்டு படத்தயாரிப்பு குழு RS இன்போடெயின்மெண்ட் ஒரு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. விடுதலை படத்தின் இரண்டு பாகங்களிலும் இயக்குனர் வெற்றிமாறனுக்கு பக்க பலமாக விளங்கிய மதிமாறன் புகழேந்தியின் இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பார் எனவும், இப்படத்தை தங்கள் நிறுவனம் தயாரிக்கவுள்ளது எனவும் RS இன்போடெயின்மெண்ட் படத்தயாரிப்பு குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்பின் இப்படம் குறித்த எத்தகவலும் வெளிவராமல் இருந்தது.
மாமன் படம்: மே 16 வெளியீடு
நடிகர் சூரியும், 'விலங்கு’ வெப்சீரிஸ் புகழ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் ’மாமன்’ என்ற படத்தில் படு பிஸியானர். மாமன் படத்தில் சூரிக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்கிறார். மேலும், நடிகர் ராஜ்கிரண் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். சூரியின் நடிப்பில் உருவாகியுள்ள மாமன் திரைப்படம் வருகிற மே 16 ஆம் தேதி திரையில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மண்டாடி:
மாமன் படம் வெளியீட்டுக்கு தயாராகியுள்ள நிலையில், முன்னர் அறிவிக்கப்பட்ட படம் தொடர்பான விவரங்களை RS இன்போடெயின்மெண்ட் வெளியிட்டுள்ளது. நடிகர் சூரி- இயக்குனர் மதிமாறன் புகழேந்தி கைக்கோர்க்கும் புதிய படத்திற்கு “மண்டாடி” என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். சத்யராஜ், மஹிமா நம்பியார், ரவீந்திர விஜய்,அச்சுயுத் குமார் போன்றவர்கள் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஆழ்கடல் நடுவே படகு தீப்பிடித்து எரிந்துக் கொண்டிருக்கும் காட்சியானது படப்பெயர் வெளியீடு தொடர்பான போஸ்டரில் இடம்பெற்றுள்ளது. அதனால், இதிலும் விடுதலை படம் போல் நடிகர் சூரியிடமிருந்து ஆக்ஷன், சேஷிங் காட்சிகளை எதிர்ப்பார்க்கலாம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
#Mandaadi ⛵🔥 When the sea carries secrets, the fire will tell us stories 🌊⚓
— Actor Soori (@sooriofficial) April 18, 2025
First Look from Tomorrow ❤️🔥
எல்லையற்ற கடல் தன்னுள் முடிவில்லா இரகசியங்களை சுமக்கும்பொழுது, நெருப்பினால் மட்டுமே அதன் கதைகளை சொல்ல முடிகிறது 💪#Mandaadi #MandaadiTitleLook @sooriofficial… pic.twitter.com/oSHcfyEwLY