தமிழ்நாடு

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை.. மேற்கு வங்க வாலிபர் கைது!

திருவள்ளூா் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை.. மேற்கு வங்க வாலிபர் கைது!
A young man from West Bengal was arrested for sexually assaulting a minor girl
திருவள்ளூர் மாவட்டம், ஆரம்பாக்கம் அருகே கடந்த 12 ஆம் தேதி, 10 வயது சிறுமி மர்ம நபரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில், 14 நாட்களாக போலீசார் தேடி வந்த குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒரு வாலிபரை ஆரம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த 12 ஆம் தேதி நடந்த இந்த கொடூர சம்பவத்தில், போலீசார் விசாரணையின் போது, சிறுமியை ஒரு வாலிபர் பின் தொடர்ந்து கடத்திச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குற்றவாளியைப் பிடிக்க 30 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, 700க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சந்தேகத்தின் பேரில் 400க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

குற்றவாளியை அடையாளம் காண உதவுபவர்களுக்கு ₹5 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என போலீஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், ரயில் நிலையங்களில் தீவிர தேடுதல் நடத்தப்பட்டது. குற்றவாளி ரயிலில் பயணிக்கும் ஒரு சிசிடிவி புகைப்படம் வெளியான நிலையில், அந்த ரயில் சென்ற பகுதிகளில் போலீசார் தங்கள் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தினர்.

இந்த நிலையில், ஆரம்பக்கம் ரயில் அதே உடையுடன் நின்று கொண்டிருந்த வாலிபரை காவல்துறையினர் அடையாளம் கண்டு கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து, பிடிபட்ட நபரின் புகைப்படத்தை பாதிக்கப்பட்ட சிறுமியிடம் காட்டியபோது, தன்னை பாலியல் வன்கொடுமை செய்த நபர் இவர்தான் என சிறுமி அடையாளம் காட்டியதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து போலீசார் அந்த வாலிபரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.