தமிழ்நாடு

தமிழ் மொழியை கட்டாயமாக்க புதிய சட்ட இயற்ற வேண்டும் - ஜி.கே. மணி கோரிக்கை

தமிழ் மொழியை கட்டாய மொழியாக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் இல்லையெனில் புதிய சட்டம் இயற்ற வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற தலைவர் கோ.க. மணி வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் மொழியை கட்டாயமாக்க புதிய சட்ட இயற்ற வேண்டும் - ஜி.கே. மணி கோரிக்கை
தமிழ் மொழியை கட்டாய மொழியாக்க புதிய சட்ட இயற்ற வேண்டும் - ஜி.கே. மணி கோரிக்கை
தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசியச பாமக சட்டமன்ற குழுத்தலைவர் கோ. க. மணி, தமிழகத்தில் மூன்றாயிரத்திற்கும் அதிகமான பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே இருப்பதாகவும், அந்த நிலையை மாற்றி குறைந்தது மூன்று ஆசிரியர்கள் நியமனம் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

தமிழை கட்டாய மொழியாக்குவதற்கான சட்டத்திற்கு எதிராக தனியார் பள்ளிகள் தொடர்ந்த வழக்கு சுமார் 20 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் நிலையில், அந்த வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் இல்லையெனில் புதிய சட்டம் இயற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பின்பு நான்காயிரம் உதவிப்பேராசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்ற அறிவிப்பு தற்போது வரை செயல்பாட்டிற்கு வரவில்லை எனவும், அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தலா ஒரு கலை அறிவியல் கல்லூரி ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதன் தரத்தையும் உயர்த்த நடவடிக்கை எடுப்பதோடு, காலியாக உள்ள 9 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை உடனடியாக நியமனம் செய்ய வேண்டும் எனவும் கோ.க. மணி வலியுறுத்தினார்.