சென்னை, கோடம்பாக்கம் டிரஸ்ட் புரம் பகுதியை சேர்ந்தவர் இம்ரான். இவர் அதே பகுதியில் உள்ள சலூன் கடையில் முடி வெட்டும் வேலை செய்து வருகிறார். இம்ரான் கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள டீக்கடைக்கு டீ குடிக்க சென்றுள்ளார். அப்போது அங்கு மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த 9 பேர் கொண்ட கும்பல் ஒன்று டீக்கடை ஊழியரிடம் வீண் தகராறில் ஈடுபட்டதுடன் எண்ணூரை சேர்ந்த டீ மாஸ்டர் தவபாண்டியன் என்பவரை தாக்கி கடையில் இருந்த கண்ணாடி பாட்டில்களை உடைத்து ரகளையில் ஈடுபட்டனர்.
மேலும், டீ கடையில் டீ குடித்து கொண்டிருந்த சலூன் கடை ஊழியர் இம்ரானையும் அந்த கும்பல் தாக்கியதுடன் அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்த பிரியாணி கடை ஊழியரான கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஹக்கீம் சேக் என்பவர் மீதும் தாக்குதல் நடத்தினர்.
இதில் டீ மாஸ்டர் தவபாண்டியன், சலூன் கடை ஊழியர் இம்ரான், பிரியாணி கடை ஊழியர் ஹக்கீம் சேக் ஆகிய மூன்று பேர் காயமுற்றனர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. உடனே அருகில் இருந்தவர்கள் பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டு சிகிச்சைக்காக கேஎம்சி மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர், இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் கோடம்பாக்கம் போலீசார் மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தி புகாரை பெற்று வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கும்பலை தேடிவந்தனர். போலீசார் சம்பவயிடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் கண்டு பிடித்து கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் திருச்செல்வம், சஞ்சய், நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பரணிதரன் மற்றும் 17 வயதுடைய 5 சிறார்கள் என்பது தெரிய வந்தது. மேலும் சம்பவத்தன்று சிறார்கள் மற்ற கல்லூரி மாணவர்கள், ஆட்டோ ஓட்டுநர் என ஒன்பது பேர் மது அருந்தி விட்டு போதையில் வீண் தகராறில் ஈடுபட்டதுடன் மூன்றுபேரை தாக்கியது விசாரணையில் தெரியவந்தது.
இதனை அடுத்து போலீசார் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.