Show any Bunny Hop Catch… இந்த வகையான கேட்ச்கள் ”பன்னி ஹாப்”என்று அழைக்கப்படுகின்றன. பவுண்டரி லைன்களில் இதுப்போன்ற கேட்சுகளை பிடிப்பது பீல்டர்களின் புத்திக்கூர்மை என கிரிக்கெட் வர்ணனையாளர்களால் வர்ணிக்கப்பட்டு வருகிறது.
தற்போது, இதுப்போன்ற கேட்சுகளுக்கு செக்மேட் வைத்து கிரிக்கெட் ரூல்ஸ்களை வரையறுத்துள்ளது மேரிலேபோன் கிரிக்கெட் கிளப் (MCC- Marylebone Cricket Club). அதாவது, "பன்னி ஹாப்" (bunny hop) கேட்ச்கள் இனி சட்டவிரோதமாகக் கருதப்படும் என்றும், அதற்கு அவுட் வழங்கப்படாது என்றும் புதிய விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
லாஸ்ட் மினிட்டில் போட்டிகளை மாற்றக்கூடிய இந்த மாதிரி கேட்சுகள் தான் போட்டியை சுவாரஸ்யமாக்குகின்றன. அப்படிப்பட்ட கேட்சை பிடிப்பதில் புதிய விதி கொண்டுவர முக்கிய காரணம் என்னவென்றால், பிக் பாஷ் லீக்கில் நடைப்பெற்ற ஒரு போட்டி தான்..
கடந்த 2023 ஆம் ஆண்டு பிக் பாஷ் லீக்கில் (BBL) மைக்கேல் நெசர் ஒரு சர்ச்சைக்குரிய கேட்ச் ஒன்றினை பிடித்தார். பவுண்டரி எல்லைக்கு வெளியே பந்தை அந்தரத்தில் தட்டிவிட்டு, பின்னர் எல்லைக்குள் வந்து கேட்சைப் பிடித்தார். அப்போதைய விதிப்படி இது சட்டப்பூர்வமானதாக இருந்தாலும், பலரும் இது "நியாயமற்றது" என்று கருத்து தெரிவித்தனர். இரண்டு முறை பவுண்டரி லைனுக்கு வெளியே குதித்து பந்தை தட்டி தட்டி கேட்ச் பிடித்திருப்பார்.
இதனைத் தொடர்ந்து கிரிக்கெட் விதிகள் குறித்து விவாதங்கள் கிளம்பியது. இந்த நிலையில் தற்போது இதுதொடர்பாக புதிய விதிகளை MCC வெளியிட்டுள்ளது.
இந்த புதிய விதியின்படி, ஒரு பீல்டர் பவுண்டரிக்கு வெளியே அந்தரத்தில் பந்தை ஒருமுறை மட்டுமே தொட அனுமதிக்கப்படுவார். அந்தரத்தில் பந்தை தொட்ட பிறகு, அவர் பவுண்டரி எல்லைக்குள் முழுமையாகத் தரையிறங்க வேண்டும். ஒருவேளை, பீல்டர் மீண்டும் அந்தரத்தில் பந்தை தொட்டால் அல்லது பவுண்டரி லைனுக்கு வெளியே தரையிறங்கினால், அது சிக்ஸராகக் கருதப்படும்.
இது ரிலே கேட்ச்களுக்கும் பொருந்தும். அதாவது ஒரு பீல்டர் பந்தை பவுண்டரி லைனுக்கு வெளியே இருந்து தனது அணியின் மற்றொரு வீரருக்கு தூக்கி எறிந்தாலும், அவர் மீண்டும் பவுண்டரி லைனுக்குள் தரையிறங்க வேண்டும். மாறாக அவர் மீண்டும், எல்லைக் கோட்டிற்கு வெளியே குதித்தால் அது சிக்ஸர் தான்.
இப்படியாக, போட்டிகளை சுவாரஸ்யமாக்கக் கூடிய கேட்ச்சிற்கு புது விதி அறிவித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.