சர்வதேசப் போட்டிகளுக்குத் தயாராகும் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான கட்டாய உடற்தகுதித் தேர்வு, பெங்களூரில் உள்ள பிசிசிஐ மையத்தில் நடைபெற்று வரும் நிலையில், மூத்த வீரர் விராட் கோலிக்கு மட்டும் லண்டனில் தேர்வு எழுதச் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, ஜஸ்பிரித் பும்ரா, ஷுப்மன் கில் போன்ற முன்னணி வீரர்கள் உட்பட பெரும்பாலான வீரர்கள் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) தங்களது உடற்தகுதித் தேர்வை மேற்கொண்டனர். ஆனால், குடும்பத்துடன் இங்கிலாந்தில் இருக்கும் விராட் கோலிக்கு மட்டும், லண்டனில் ஒரு மேற்பார்வையாளரின் முன்னிலையில் இந்தத் தேர்வை முடிக்க பிசிசிஐ அனுமதி அளித்துள்ளது.
பொதுவாக, அனைத்து வீரர்களுக்கும் ஒரே மாதிரியான நடைமுறை பின்பற்றப்படும் நிலையில், கோலிக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டது குறித்து கிரிக்கெட் வட்டாரங்களில் கேள்வி எழுந்துள்ளது.
பிசிசிஐ விளக்கம்
இதுகுறித்து மூத்த பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், "கோலி இந்தத் தேர்வை வெளிநாட்டில் நடத்திக்கொள்ள முன்னதாகவே அனுமதி பெற்றிருப்பார்" என்று தெரிவித்தார். இருப்பினும், இந்தச் சம்பவம் எதிர்காலத்தில் மற்ற வீரர்களுக்கும் இது போன்ற சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுமா? என்ற விவாதத்தைத் தூண்டியுள்ளது.
பிசிசிஐ அனுமதியுடன் லண்டனில் உடற்தகுதியை நிரூபித்திருந்தாலும், ரோஹித் உள்ளிட்ட மற்ற வீரர்கள் வரும்போது இவருக்கு மட்டும் ஏன் விலக்கு எனப் பலரும் கேள்வி எழுப்புவதால் இது விவாதப் பொருளாகியுள்ளது
தற்போது டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுள்ள கோலி, வரவிருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.