இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 4-வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் மான்செஸ்டரிலுள்ள ஓல்ட் டிராஃபோர்டில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சினை தேர்வு செய்தது.
முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பான அடித்தளத்தை அமைத்து கொடுத்தார்கள். தொடக்க ஆட்டக்காரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் (58 ரன்கள்) மற்றும் கே.எல். ராகுல் (46 ரன்கள்) எடுத்த நிலையில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினர்.
இந்தத் தொடரில் சிறப்பான பார்மில் இருக்கும் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் 12 ரன்களில் பென் ஸ்டோக்ஸ் பந்து வீச்சில் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இதன் பின் ஜோடி சேர்ந்த சாய் சுதர்சன் மற்றும் ரிஷப் பந்த் இணை நிதானமாக ரன்களை குவிக்கத் தொடங்கியது.
காயமடைந்த ரிஷப் பந்த்:
ஆட்டத்தின் ஒரு கட்டத்தில், பந்த் 37 ரன்களில் பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, வோக்ஸின் பந்துவீச்சில் ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய முயன்றார். ஆனால், பந்து அவரது காலை பதம் பார்த்தது. இங்கிலாந்து அணி வீரர்கள் எல்பிடபிள்யூ அப்பீல் செய்தனர், நடுவர் அவுட் வழங்காததால் அதைத் தொடர்ந்து டிஆர்எஸ் மேல் முறையீடு செய்தனர். அதில் அவுட் இல்லை என்பது தெரிய வந்தது. இருப்பினும், காலில் ஏற்பட்ட காயத்தால் வலியில் துடித்தார் ரிஷப் பந்த்.
இந்திய அணிக்கான பிசியோ மைதானத்திற்குள் வந்து ரிஷப் பந்தினை பரிசோதித்த போது, நிலைமை மோசமாக இருப்பதை உணர்ந்தார்கள். உடனடியாக மைதானத்திற்குள் கோல்ப் வாகனம் வரவழைக்கப்பட்டு மைதானத்திற்கு வெளியே ரிஷப் பந்த் அழைத்துச் செல்லப்பட்டார்.
ரிஷப் பந்த் ரிட்டையர்ட் ஆன நிலையில், ஜடேஜா களமிறங்கினார். மறுமுனையில் தனக்கு கிடைத்த வாய்ப்பை கவனமாக கையாண்டு விளையாடி வந்த சாய் சுதர்சன் 61 ரன்களில் அவுட்டாகினார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 264 ரன்கள் எடுத்திருந்தது.
சோபிக்காத லோயர் ஆர்டர்:
இரண்டாவது நாள் இன்று தொடங்கிய சில நிமிடங்களில் ஜடேஜா அவுட்டாக, காலில் ஏற்பட்ட காயத்தையும் பொறுப்படுத்தாமல் களமிறங்கினார் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த். தாக்கூர். வாஷிங்டன் சுந்தர் தங்களது பங்குக்கு ஸ்கோர் குவிக்க மறுமுனையில் ரிஷப் பந்த் அரைச்சதம் விளாசி அசத்தினார். 54 ரன்கள் எடுத்திருந்த நிலையில்,
ஆர்ச்சர் பந்தில் க்ளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினார் ரிஷப் பந்த்.
லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வழக்கம் போல வந்த வேகத்தில் நடையை கட்ட இந்திய அணி 358 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகியது. பந்துவீச்சினை பொறுத்தவரை இங்கிலாந்து அணியின், ஜோஃப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்களையும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தினர். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு ஆடுகளத்திற்கு திரும்பிய, லியாம் டாஸன் 1 விக்கெட் மட்டுமே வீழ்த்தினார்.
ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் முதல் இன்னிங்க்ஸில் 358 ரன்கள் என்பது சராசரியான ஸ்கோராகும். இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியுள்ளது இங்கிலாந்து அணி.