IND vs ENG: வலியுடன் களம் திரும்பிய பந்த்.. 358 ரன்களுக்கு ஆல்-அவுட்டாகிய இந்திய அணி!
ஓல்ட் டிராஃபோர்டில் நடைப்பெற்று வரும் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளில், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 358 ரன்கள் குவித்து அசத்தியுள்ளது. லியாம் டாஸனின் பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா ஆட்டமிழந்ததன் மூலம், 114.1 ஓவர்களில் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.