விளையாட்டு

ஆசியக் கோப்பை: இந்திய அணி விலகல்.. பிசிசிஐ அதிரடி நடவடிக்கை!

ஆசிய கோப்பை உட்பட ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் அனைத்து போட்டிகளில் இருந்தும் இந்திய அணி விலகுவதாக அறிவித்துள்ளது. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் இருப்பதால் விலகுவதாக பிசிசிஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஆசியக் கோப்பை: இந்திய அணி விலகல்.. பிசிசிஐ அதிரடி நடவடிக்கை!
ஆசியக் கோப்பை: இந்திய அணி விலகல் பிசிசிஐ அதிரடி நடவடிக்கை!
இந்திய கிரிக்கெட் அணியின் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) நடத்தும் அனைத்து போட்டிகளில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு (2025) இறுதியில் நடைபெறவுள்ள வளர்ந்து வரும் பெண்கள் ஆசிய கோப்பை மற்றும் ஆண்கள் ஆசிய கோப்பை போட்டிகளில் இருந்து இந்தியா விலகுவதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் (ACC) தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டியில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய இராணுவம் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு எல்லைப்பகுதியில் ஏவுகனை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில், 70-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். மேலும் 80-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.

இந்தியா, பாகிஸ்தான் இடையே தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவியதால், போர் அபாயம் நிலவியது. இந்தியா மீது பாகிஸ்தான் ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய நிலையில், இந்தியா அதனை வெற்றிகரமாக முடியடித்தது. 3 நாட்களாக மேலாக நடைபெற்று வந்த தாக்குதலில், அமெரிக்கா தலையிட்டு பிரச்னையை முடிவுக்கு கொண்டுவந்ததாக கூறப்பட்டது. முன்னரே, பாகிஸ்தானுக்கு வழங்கும் சிந்துநதிநீர் நிறுத்தபட்டது. போர் பதற்றத்தின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுத்த அஜர்பைஜான், துருக்கி போன்ற நாடுகளுடன் இந்தியா வர்த்தக உள்ளிட்ட அனைத்து உறவுகளை முறித்து வருகிறது.

இந்நிலையில், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மோக்சின் நாக்வி, உள்ளதால், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) தனது அணியை ACC நடத்தும் அனைத்து போட்டிகளிலும் பங்கேற்க அனுமதிக்காது என்று அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் அணியின் பங்கு தொடர்பாக, இந்திய கிரிக்கெட் மைதானம் மற்றும் அரசியல் சூழ்நிலைகளின் அடிப்படையில், பிசிசிஐ எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை. இந்திய அணியின் பங்கேற்பு அரசாங்க அனுமதிக்கு உட்பட்டது.

2025 ஆம் ஆண்டின் ஆசிய கோப்பை இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால், பாகிஸ்தான் அணியின் பங்கேற்பு குறித்து நிலவும் குழப்பங்கள், போட்டியின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

இந்திய கிரிக்கெட் முன்னணி வீரர் சுனில் கவாஸ்கர், பாகிஸ்தான் அணியின் பங்கேற்பு குறித்த சந்தேகங்களை வெளியிட்டுள்ளார். பாகிஸ்தான் அணியின் பங்கேற்பு, தற்போதைய அரசியல் சூழ்நிலைகளில் சாத்தியமற்றது என்று அவர் கூறியுள்ளார்.

இந்திய அணியின் விலகல், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் இருப்பதை எதிர்த்து எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கை என்றும், எதிர்காலத்தில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் போட்டிகளில் பங்கேற்குமா என்பது குறித்து பிற்காலத்தில் முடிவாகும் என்று கூறப்படுகிறது.