அரசியல்

பல்கலைக்கழக துணைவேந்தராகும் மு.க.ஸ்டாலின் - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பதிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனி பல்கலைக்கழகங்களின் துணை வேந்தராக செயல்படுவார் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பல்கலைக்கழக துணைவேந்தராகும்  மு.க.ஸ்டாலின் - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தமிழ்நாடு அரசிற்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே மோதம் போக்கு நீடித்து வந்தது. இதையடுத்து, பல்கலைக்கழக துணைவேந்தராக முதல்வர் மு.க.ஸ்டாலினை நியமிப்பது, தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக திருத்த மசோதா உள்ளிட்ட சட்ட மசோதாக்களை தமிழ்நாடு அரசு, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பியது. இதனை ஏற்றுக் கொள்ளாத ஆளுநர் ஆர்.என்.ரவி அதை குடியரசுத் தலைவருக்கும் அனுப்பவில்லை என்று கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10-க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் இருந்ததை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுதாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, தமிழக அரசு அனுப்பிய 10 மசோதாக்கள் மீது ஆளுநர் எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுகிறது. இந்த மசோதாக்கள் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து அங்கீகரிக்கப்பட்டதாகக் கருத்தில் கொள்ளப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், ஆளுநர் மசோதாக்களை கிடப்பில் போட்டது சட்டவிரோதமானது என்று தெரிவித்த உச்சநீதிமன்றம், சட்டத் திருத்த (2வது) மசோதா உட்பட 10 மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றமே ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தது. அதன்படி, ஆளுநருக்கு பதிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இனி பல்கலைக்கழகங்களின் துணை வேந்தராக செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்த தமிழக மசோதாக்கள் எவை?

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக திருத்த மசோதா

பல்கலைக்கழக சட்ட (சென்னை பல்கலைக்கழகம் நீங்கலாக) அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள் திருத்த மசோதா

தமிழ்நாடு அம்பேத்கர் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா உட்பட 10-க்கும் மேற்பட்ட மசோதாக்கள் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன.