ஈழத் தமிழர்களை கொடியவர்கள் போன்று சித்தரித்துள்ள ‘கிங்டம்’ திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் எதிர் காலங்களில் தமிழர்கள் குறித்து தவறாக சித்தரிக்க முயன்றால் கடும் எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவின் விவரங்கள் பின்வருமாறு;
“தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகிய ‘கிங்டம்’ திரைப்படம் கடந்த 31ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியாகியது. இதில், ஈழத்தமிழர்களின் தலைவன் பெயர் முருகன் என்றும் அங்குள்ள தமிழர்களை கொடியவர்கள் போலவும், தமிழர் தலைவனை அழித்து தேவரகொண்டா ஆட்சி அமைப்பது போன்றும் காட்சிகள் இடம்பெற்றிருப்பது கடும் கண்டத்துக்குரியது.
வன்மத்துடன் கூடிய சித்தரிப்பு
மலையாளம், இந்தி திரைப்படங்களில் தமிழர்களை தொடர்ந்து இழிவாக சித்தரித்து வரும் போக்கு, சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, தற்போது வெளியாகி இருக்கும் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்த கிங்டம் திரைப்படத்தில், ஈழத்தமிழர்களை குற்றவாளிகள் போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஈழத்தமிழர்களை வன்முறையாளர்களாக சித்தரித்து, முழுக்க முழுக்க உள்நோக்கத்தோடும், தமிழர்கள் மீதான வன்மத்தோடும் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
கடும் கண்டனத்திற்குரியது
2009இல் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் துணையோடு, சிங்களப் பேரினவாத அரசு மேற்கொண்ட அறமற்ற போரால், பேரழிவை சந்தித்த ஈத்தமிழர்கள், உலகரங்கில் நீதிக்கேட்டு மன்றாடிக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய சூழலில், ஈத்தமிழர்களை ‘கிங்டம்’ திரைப்படத்தின் வாயிலாகத் பயங்கரவாதிகள் எனக் காட்ட முனைவது கடும் கண்டனத்திற்குரியது.
‘கிங்டம்’ படத்துக்கு தடை விதிக்க வேண்டும்
அழிவின் விளிம்பில் நிற்கிற ஈழச்சொந்தங்களின் தீரா வலிகளையும், பெரும் காயங்களையும், இழைக்கப்பட்ட அநீதிகளையும் பேசாது, தமிழ் மக்களை வன்முறை வெறியாட்டம் மிகுந்தவர்களாகக் காட்ட செய்ய முயலும், ‘கிங்டம்’ திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுக்கிறது.
எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்
மேலும், தமிழ்நாட்டிலுள்ள திரையரங்க உரிமையாளர்கள் தாமாகவே முன் வந்து, ஈழத்தமிழர்களை கொச்சைப்படுத்தியுள்ள ‘கிங்டம்’ திரைப்படத்தை திரையிடுவதை நிறுத்த வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.
எதிர் வரும் காலங்களில், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட எந்த மொழிகளானாலும், தமிழர்கள் குறித்து தவறாக சித்தரிக்க முயன்றால் கடும் எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி எச்சரிக்கை விடுக்கிறது” என்று அவர் தெரிவித்துள்ளார்.