அரசியல்

திமுக கூட்டணி - தவெக கூட்டணி இடையேதான் கடும் போட்டி- டிடிவி தினகரன்

2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக மாற்றும் தவெக இடையே தான் போட்டி இன்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணி - தவெக கூட்டணி  இடையேதான் கடும் போட்டி- டிடிவி தினகரன்
TTV Dhinakaran
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுக பங்கேற்கும் கூட்டணியே வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

துரோகத்தை வீழ்த்துவதே இலக்கு

"எடப்பாடி பழனிசாமி எங்களுக்குத் துரோகத்தை இழைத்தார். அவர் எங்களைச் சந்திக்கவே தயங்குகிறார். எனவே, துரோகத்தை வீழ்த்த வேண்டும் என்பதே எங்கள் இலக்கு," என்று அவர் கூறினார். மேலும், வரும் 2026 சட்டசபைத் தேர்தலில் அமமுக பங்கேற்கும் கூட்டணியே வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, ஓ. பன்னீர்செல்வம், செங்கோட்டையன், சசிகலா ஆகியோரிடம் பேசி வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், அமமுக-வுடன் கூட்டணி அமைக்கச் சில கட்சிகள் பேசி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2026 தேர்தல் களம் குறித்த கணிப்பு

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் கட்சி கூட்டணிக்கும், நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கூட்டணிக்கும் இடையேதான் கடும் போட்டி இருக்கும் என்று டிடிவி தினகரன் கணித்துள்ளார். அமமுக யாருடன் கூட்டணி அமைக்கும் என்பது டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பீகார் தேர்தல் முடிவுகள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "பீகார் தேர்தல் முடிவுகள் தமிழ்நாட்டில் எதிரொலிக்காது என்றே நான் கருதுகிறேன்," என்று அவர் பதிலளித்தார்.