தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மக்கள் சந்திப்புப் பயணத்தின்போது அவருக்குக் கூடும் கூட்டம் குறித்து, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
விஜய் சுற்றுப்பயணம்
தவெக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். இதுவரை அவர் திருச்சி, அரியலூர், நாகை மற்றும் திருவாரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை காண குவிந்தனர். இதைத்தொடர்ந்து, கூட்டமெல்லாம் ஓட்டாக மாறாது என்று பல அரசியல் தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இதுகுறித்து நேற்று திருவாரூரில் பேசிய விஜய், "இந்தக் கூட்டம் ஓட்டாக மாறாது என்கிறார்கள். அப்படியா..?" என்று தொண்டர்கள் மத்தியில் கேள்வி எழுப்பினார். இந்நிலையில், விஜய்யின் பரப்புரை தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
'கூட்டம் ஓட்டாக மாறாது'
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், "நடிகர்கள் அரசியலுக்கு வருவதால் மட்டும் விமர்சனங்கள் எழுவதில்லை. நடிக்க வந்தாலும் விமர்சனங்கள் எழும். விஜய்க்கு கூடுகிற கூட்டம் கண்டிப்பாக ஓட்டாக மாறாது. அது அனைத்துத் தலைவர்களுக்கும் பொருந்தும். இது விஜய்க்கும் பொருந்தும். எனக்கும் பொருந்தும்" என்றார்.
மேலும் அவர், "நல்ல பாதையில் செல்லுங்கள், தைரியமாக முன்னேறுங்கள். மக்களுக்காகச் செய்யுங்கள் என்பதுதான் நான் எல்லா அரசியல்வாதிகளுக்கும் வைக்கும் வேண்டுகோள். நான் குடிமகனாக இருந்தாலும் இதே வேண்டுகோளைத்தான் முன்வைத்திருப்பேன்" என்று தெரிவித்தார்.