மதுரை மண்டல தமிழ் மாநில காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க மையத்தில் வைத்து நடைபெற்றது. இதில் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்றனர்.
தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பேசியதாவது, “அனைத்து மதங்களும் சம்மதமே என்ற விதியில் தான் தமிழக அரசும் அனைத்து கட்சிகளும் முக்கியமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் செயல்பட வேண்டும் என்பது விதி. ஆனால் துரதிஷ்டவசமாக திமுகவின் முக்கிய தலைவரும் அமைச்சருமான பொன்முடி இன்றைக்கும் பதவியில் இருக்கின்ற ஒரு அமைச்சர். ஒரு மதத்தைப் பற்றி ஒரு கீழ் தரமாக முகம் சுளிக்கும் வகையில் பேசியது தமிழகத்திற்கு அவமானம்.
கட்சிப் பதவியில் இருந்து எடுத்தால் போதாது. அமைச்சர் பொறுப்பில் இருந்து உடனடியாக அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால் திமுக அரசும் அதை சார்ந்த தலைவரும் அவரை ஆதரிப்பதாக அர்த்தம்.
அதிமுக- பாஜக கூட்டணி மீண்டும் தமிழகத்தில் ஏற்பட்டிருக்கிறது. NDA கூட்டணி இந்தியாவில் மீண்டும் வலுவாக உருவாகத் தொடங்கி இருக்கிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷாவும்
அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பத்திரிக்கையாளர்களை சந்தித்து கூட்டணியை உறுதிப்படுத்திய பிறகு திமுகவிற்கு அதன் கூட்டணி, தேர்தல் தோல்வி ஜுரம் ஏற்பட்டது.
அதிமுக பாஜக கூட்டணி என்பது நேச்சுரல்ஸ் அலையன்ஸ். இந்த கூட்டணி ஏற்கனவே இருந்த கூட்டணி வென்ற கூட்டணி மீண்டும் தமிழகத்தினுடைய அவசர தேவைக்காக சேர்ந்திருக்கிறது. திமுக அரசை அகற்றுவதற்காகவும் மக்கள் மீது சுமையை தொடர்ந்து ஏற்றுக் கொண்டிருக்கின்ற திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றிய திமுக கட்சியை அகற்றுவதற்காக அதிமுக- பாஜக கூட்டணி தமிழகத்தில் மீண்டும் அமைந்திருக்கிறது.
மத்திய உள்துறை அமைச்சரை சென்னையில் இருக்கும்போது நான் நேரடியாக சந்தித்து தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி அடுத்த கட்ட நடவடிக்கைக்கு அடித்தளமாக மற்றும் கூட்டணியை பலப்படுத்தக்கூடிய நிலவரம் குறித்து கூட்டணி தலைவர் முறையில் நான் அவர்களிடம் பேசினேன். கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை வலுவான கூட்டணியாக இருக்கும். வக்பு வாரிய சட்டத்திற்கான மசோதாவை ஒருவரி விடாமல் படித்து விட்டு தான் ஆதரிக்கிறேன்.
இஸ்லாமிய குடும்பங்களுக்கு படிப்பாக இருக்கட்டும், சுகாதாரமாக இருக்கட்டும் வரும் காலங்களில் வாழ்வாதாரமாக இருக்கட்டும் அது சிறக்க வேண்டும், உயர வேண்டும், வளர வேண்டும் என்பதற்காக புதிய கோட்பாடுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றது. கோட்பாட்டு அடிப்படையில் பல வருடங்களுக்கு முன்பு ஏற்படுத்திய மசோதா என்பதால் அந்த மசோதாவை நியாயமாக விடுபட்டவர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் .
மசோதாவின் அடிப்படையில் வாக்பு வாரிய சொத்தின் அடிப்படையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்களுக்கு உதவிகள் நடந்து கொண்டிருக்கிறது. லட்சகணக்கான இஸ்லாமியர்களுக்கு உதவிகள் நடைபெற வேண்டும் என்று கோட்பாடுகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் தான் தமிழ் மாநில காங்கிரஸ் வாக்கை நான் அளித்திருக்கின்றேன்.
பாஜகவும் அதிமுகவும் கூட்டணி ஒத்த கருத்து உடைய கூட்டணி. எங்களுக்குள் கருத்து வேறுபாடு கிடையாது. தமிழக மக்கள் எதிர்பார்த்த கூட்டணி தொடங்கிவிட்டது. இனிமேல் ஒத்த கருத்துடைய கட்சி எல்லாம் இங்கு வரலாம்.
திமுக காங்கிரஸ் கூட்டணியை விட வேறு உதாரணம் தமிழகத்தில் சொல்லவே முடியாது. மறைந்த தலைவர் கருணாநிதி ஒரு கட்டத்தில் காங்கிரஸ் கட்சியினுடைய செயல்பாடுகளை பார்த்து அவர்கள் திமுகவுக்கு கொடுத்த வேதனைகளை நினைத்து கூட நட்பு கேடாய் முடியும் என்று சொன்னதெல்லாம் நினைவுக்கு வர விரும்புகிறேன். மறைந்த தலைவர்களைப் பற்றி கொச்சைப்படுத்துவது நம்முடைய கலாச்சாரம் அள்ள. அதை பற்றி பேச வேண்டும் என்றால் பல கட்சி தலைவர்களைப் பற்றி அடுக்கடுக்காக பேசலாம்.
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு, கொலை, கொள்ளை, திருட்டு, போதைப்பொருள் போன்றவற்றை வளர விட்டு அடக்க முடியாமல், தடுக்க முடியாமல், விடுவிக்க முடியாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்ற அரசாக இந்த அரசு செயல்படுவது வேதனைக்குரியது. இனிமேல் இதை கட்டுப்படுத்த முடியுமா? முடியாதா? என்றால் முடியாது என்ற நிலைக்கு பொதுமக்கள் வந்து விட்டார்கள்.
எவ்வளவு கஷ்டமோ அவ்வளவு கஷ்டத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் முறை ஜனநாயகப்படி நடைபெற வேண்டும். அதன் அடிப்படையில் வாக்காளர்கள் அரசின் மீது கோபத்தை தனது வாக்கின் மூலம் வெளிப்படுத்துவார்கள்” என்று பேசினார்.