அரசியல்

ஏழு மண்டல பொறுப்பாளர்கள் நியமனம்.. செந்தில்பாலாஜிக்கு ப்ரமோஷன் ? அறிவாலயம் அதிரடி!

தி.மு.க.வை நான்கு திசைகளிலும் இருந்து ஆபத்துகள் சூழ்ந்துள்ள நிலையில் அதை சமாளிக்க ஏழு பொறுப்பாளர்களை நியமித்திருக்கிறார் ஸ்டாலின், தமிழகத்தை ஏழு மண்டலங்களாக பிரித்து ஏழு பேரின் கைகளில் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டிருக்கும் நிலையில், இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதே தொண்டர்களின் கேள்வி தற்போது எழுந்துள்ளது.

ஏழு மண்டல பொறுப்பாளர்கள் நியமனம்.. செந்தில்பாலாஜிக்கு ப்ரமோஷன் ? அறிவாலயம் அதிரடி!
செந்தில்பாலாஜிக்கு ப்ரமோஷன் ? அறிவாலயம் அதிரடி!
ஏழுமண்டல பொறுப்பாளர்கள் குறித்து, திமு.க தலைமைக்கு நெருக்கமான சீனியர்கள் சிலரிடம் பேசினோம். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் இருந்து எல்லாமே வெற்றியாகத்தானே போயிட்டிருக்குது. அந்த வகையில் வருகிற 2026 நேர்தல் வெற்றிக்கும் பக்காவாக ஸ்கெட்ச் போட்டுவிட்டார் ஸ்டாலின், அத்தனை தொகுதியிலும் வெல்வோம்ன்னு அவர் வெளியில் பேசியது தொண்டர்களை உற்சாகப்படுத்தத்தானே தவிர, உண்மையில் கடும் சவால்கள் இருப்பது அவருக்குத் தெரியும்.

இயல்பாகவே ஆளுங்கட்சி மீது மக்களுக்கு இருக்கும் பொதுவான அதிருப்தி, அ.தி.மு.க. அமைத்துள்ள கூட்டணி, விஜய்யில் எழுச்சி, சீமான் தரும் குடைச்சல்கள் இவற்றை எல்லாம் தாண்டி பொன்முடி மாதிரியான சீனியர்களால் பொதுவெளியில் ஈட்சிக்கு கிடைக்கும் அதிருப்தினு எல்லாவற்றையும் தலைவர் உணர்ந்திருக்கார். எனக்கு ஓட்டுப் போடுங்கன்னு வெளியே மக்களிடம் போய் நிற்பதற்கு முன் உட்கட்சிக்குள்

இருக்கும் பிரச்னைகளை சரிபண்ணியே தீரணும்னுதான் மண்டலப் பிரிப்பை முடிச்சு, அதற்கு பொறுப்பாளர்களையும் நியமிச்சிருக்கார். அதன்படி தமிழகத்தின் கழகத்தை ஏழாகப் பிரித்துள்ளார். அதற்கான பொறுப்பாளர்களையும் நியமித்துவிட்டார். இந்த ஏழு மண்டலத்துக்கான ஏழு பொறுப்பாளர்கள்... ராசா, வேலு, செந்தில்பாலாஜி, சக்கரபாணி தங்கம் தென்னரசு, கனிமொழி, தேரு ஆகியோர் தான்.
ஆராசாவின் கட்டுப்பாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களும், எ.வ.வேலுவின் கட்டுப்பாட்டில் விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை தொடங்கி சேலம் வரையிலான வடக்கு மண்டலமும் வருகின்றன. கொங்கு மண்டலமான

கரூர், நாமக்கள், ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் செந்தில்பாலாஜியின் கட்டுப்பாட்டில் வருகின்றன. திண்டுக்கல், மதுரை, தேனி உள்ளிட்டவை சக்கரபாணியின் கட்டுப்பாட்டிலும் விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்கள் தங்கம். தென்னரசு கட்டுப்பாட்டிலும் வருகின்றன. கனிமொழியில் நிர்வாகத்தின் கீழ் தூத்துக்குடி கண்ணியாகுமரி, தென்காசி போன்றவை வருவதாக திட்டம். நேருவின் கட்டுப்பாட்டில் டெல்டா மாவட்டங்கள் வருகின்றன.

நீலகிரிக்கு கிளம்பும் முன்பாக இந்த ஏழு பேரையும் அழைத்த ஸ்டாலின், அவர்களிடம் தங்கள் மண்டலங்களில் செய்ய வேண்டிய. செய்யக் கூடாத விஷயங்களை பக்காவாக அட்வைஸ் செய்துவிட்டார். அதன்படி இந்த ஏழு பொறுப்பாளர்களுக்கும் தங்கள் கட்டுப்பாட்டில் வரும் மாவட்டங்களின் செயலாளர்களை மீறிய அதிகாரம் உண்டு.

செயல்படாத மற்றும் அதிருப்திக்கு ஆளாகியிருக்கும் மாவட்டச் செயலாளர்களை மாற்றுவதில் தொடங்கி மக்கள் பிரச்னைகளை தலைமைக்கு சொல்வது. அதிமுக பாஜகவில் அதிருப்தியாக இருப்பவர்களை இழுப்பது, மண்டலங்களில் சாதி ரீதியான அமைப்புகளின் ஆதரவைப் பெறுவது. ரஜினி, அஜித் ரசிகர் மன்றங்களை கவர்வதற்கான பணிகளை செய்வது. எதிர்வரும் தேர்தலில் யார் யாருக்கு சீட் வழங்கினால் வெற்றிக்கு வாய்ப்புள்ளது என பரித்துரைப்பது வரை இவர்களின் பணி.

இதன் மூலம் அமைச்சர் பதவியை இழந்த செந்தில்பாலாஜிக்கு மிகப் பெரிய அதிகாரம் தரப்பட்டுள்ளது. அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்துவிட்ட நிலையில், அவரால் அரசு நிகழ்வுகள் உள்ளிட்ட எதிலும் கலந்துகொள்ள முடியாத நிலை அதை சரிக்கட்டவும். அதிகாரபூர்வமாக கரூர், கோவை மாவட்டங்களின் அத்தனை தொகுதியின் செயல்பாடுகளையும் செய்ய அவருக்கு லைசென்ஸை தந்திடவும்தான் இந்தப் பதவி அவருக்கு தரப்பட்டுள்ளது. அமைச்சராக செந்தில்பாலாஜி இருந்தாள் கொங்கு மண்டலத்தில் தங்கள் தேர்தல் செயல்பாடுகளுக்கும். வெற்றிக்கும் சிக்கலாக இருப்பார் என்றுதான் அவரை அமைச்சர் பதவியிலிருந்து இறக்குவதற்காக பாஜக தலைகீழாக நின்றது.

ஆனால் இன்று அவரை மொத்த கொங்குவுக்கும் அக்கும் பொறுப்பாளராக்குகிறார் தலைவர். இனி 30க்கும் மேற்பட்ட தொகுதிகளுக்கு செந்தில்பாலாஜிதான் பொறுப்பாளர் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இப்போதும் வரலாம் அல்லது ஜூனில் கழக பொதுக்குழுவிலும் வரலாம் எல்லாம் தலைவர் மற்றும் சின்னவர் கைகளில் என்று முடித்தனர்.

அமைச்சர் நேருவிடம் தி.மு.க. தலைமையின் இந்த மண்டல பிரிப்பு பற்றி கேட்டபோது. தேர்தலுக்காக எல்லா கட்சிகளும் புதுப்புது வகையில் தயாராவது இயல்புதானே. ஏன் எங்களை மட்டும் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு பார்க்குறீங்க? இந்த உன் கட்டமைப்பு விஷயங்களெல்லாம் தலைமையின் முடிவுதான். அறிவிப்பு வர்றப்ப உங்களோடு சேர்ந்து நானும் தெரிஞ்சுக்குவேன்" என்றார்.
அ.தி.மு.க. தரப்பில் மாஜி அமைச்சர் இண்டுக்கல் சீனிவாசனிடம் கேட்டபோது, அவங்க ஏழு மண்டலமா என்ன எழுபது மண்டலமாகக்கூட பிரிச்சுக்கட்டும் யார் வேணாம்னு சொன்னாங்க ஆனால் தமிழக மக்கள் ஒரே மண்டலமாக நின்னு திமுகவின் ஆட்சி அதிகாரத்தைப் பறிச்சு விட்டுக்கு அனுப்பிவைக்க முடிவு பண்ணி பல நாட்களாச்சு எங்களின் வெற்றிக் கூட்டணி வெல்லும், எடப்பாடியார் மீண்டும் முதல்வராவார். இதுதான் நிதர்சனம் என்றார்.

(குமுதம் செய்திகளுக்காக செய்தியாளர் எஸ்.ஷக்தி)