உடல்நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அன்புமணிக்கு தலைமை பண்பு இல்லை என்றும் ஐயாவை பார்த்துக்கொள்ள துப்பில்லை என்றும் அன்புமணியை கடுமையாக சாடினார்.
அன்புமணியின் பேட்டி
சமீபத்தில் ராமதாஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தபோது அவரைச் சந்திக்கச் சென்ற அன்புமணி, "ஐயாவை வைத்து அவருடன் இருப்பவர்கள் நாடகமாடிக் கொண்டிருக்கின்றனர். நான் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதாக நினைக்கின்றனர். ஐயாவுக்கு ஏதாவது நடந்தால் சும்மா இருக்க மாட்டேன், தொலைத்து விடுவேன்" என்று காட்டமாகக் கூறியிருந்தார். மேலும், ராமதாஸ் ஐசியூ-வில் அனுமதிக்கப்பட்டதால் அவரைச் சந்திக்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், அன்புமணியின் பேச்சு குறித்துப் பதிலளித்தார்.
"மாடு மேய்க்கும் சிறுவன்கூட இப்படிப் பேச மாட்டான்"
அன்புமணியின் கருத்தை கடுமையாக விமர்சித்த ராமதாஸ், "ஐயாவைப் பார்த்துக் கொள்ளத் துப்பில்லை. மாடு மேய்க்கும் சிறுவன் கூட இப்படி ஒரு பேச்சைப் பேச மாட்டான். அதனால்தான் அன்புமணிக்குத் தலைமைப் பண்பு இல்லை என்று நிர்வாகக் குழுக் கூட்டத்தில் கூறினேன். அது இன்று அவருக்கு முற்றிப்போய்விட்டது" என்று காட்டமாகத் தெரிவித்தார்.
முன்னதாக, தான் மருத்துவமனையில் ஐசியு வார்டுக்குச் செல்லவில்லை என்றும், இதயத்துக்குச் செல்லும் ரத்தக்குழாய்கள் நன்றாக உள்ளதாக மருத்துவர்கள் கூறியதாகவும் ராமதாஸ் விளக்கம் அளித்தார்.
மேலும், தான் மருத்துவமனையில் இருந்தபோது, "அனைத்து அரசியல் கட்சியினரும் நேரிலும், தொலைபேசியிலும் நலம் விசாரித்தனர். ஒரு கட்சி மட்டும்தான் நலம் விசாரிக்கவில்லை. அது புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கட்சி" என்றும் அவர் தெரிவித்தார். இனி தொடர்ச்சியாகச் செய்தியாளர்களைச் சந்திப்பதாகவும் ராமதாஸ் உறுதி அளித்தார்.